[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS என்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்; ஆனால் ராஜிவ்காந்தியை ஆதரித்தவர்களை நான் கைது செய்வேன் - சீமான்
  • BREAKING-NEWS கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கு: கொள்ளையன் முருகனை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு

பனியில் சிக்கிய கர்ப்பிணியை மீட்ட ராணுவத்தினர் ! ஒரு நெகிழ்ச்சி சம்பவம்

pregnant-woman-stuck-in-snow-delivers-twins-after-army-helps-her-to-hospital-in-kashmir

காஷ்மீரில் போக்குவரத்து வசதி இல்லாமல் பனியில் சிக்கித்தவித்த கர்ப்பிணியை மீட்டு ராணுவ வீரர்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அந்த பெண்ணுக்கு இரட்டை பெண் குழந்தை பிறந்துள்ளது.

காஷ்மீரில் கடுமையான பனிப்பொழிவு இருந்துவருகிறது. பல இடங்களில் கட்டி கட்டியாக கொட்டும் பனியால் சாலைகள் தடைபட்டு போக்குவரத்து முழுவதும் துண்டிக்கப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை பாண்டிபூரில் உள்ள ராணுவ முகாமுக்கு அருகில் உள்ள கிராமத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய ஆண் ஒருவர் தன் மனைவி பிரசவ வலியால் துடிப்பதாகவும் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல உதவ வேண்டுமென்றும் கேட்டுள்ளார். கடுமையான பனிப்பொழிவையும் பொருட்படுத்தாத ராணுவத்தினர் போன் செய்தவரின் வீட்டுக்கே சென்று அவரது மனைவியை மருத்துவமனையில் சேர்த்தனர்.

இது குறித்து பேசிய ராணுவ அதிகாரி, ''தொலைபேசி அழைப்பு வந்த போது கடுமையான பனிப்பொழிவு இருந்தது. அப்போது மைனஸ் 7 டிகிரி. பனியால் சாலைகள் முழுவதும் மூடப்பட்டு இருந்தது. சாலைப்பயணம் என்பதே முடியாத காரியமாக இருந்தது. ஆனாலும் எங்களுக்கு வேறு வழியில்லை. அந்த பெண்ணுக்கு உதவ வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம். மிகவும் சிரமப்பட்டு அந்த பெண் இருக்கும் கிராமத்துக்கு சென்றோம். எங்களுக்கு நேரம் குறைவாக இருந்ததால் அவரை ஸ்ரெக்ச்சரில் வைத்து இரண்டரை கிலோ மீட்டருக்கு மேலாக கைகளிலேயே தூக்கி வந்து ராணுவ ஆம்புலன்சில் ஏற்றினோம். பின்னர் அவரை பாண்டிபூரில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தோம்’’ என்று தெரிவித்தார்.

மருத்துவமனையில் பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் இரட்டை குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்ததால் கர்ப்பிணி உடனடியாக ஸ்ரீநகர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அன்று இரவே அப்பெண்ணுக்கு இரட்டை பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைகளும் தாயும் நலமாக இருப்பதாகவும் சரியான நேரத்தில் உதவிய இந்திய ராணுவத்துக்கு நன்றியை தெரிவிப்பதாகவும் அப்பெண்ணின் கணவர் தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close