மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. முதலமைச்சராக மம்தா பானர்ஜி உள்ளார். இந்நிலையில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏவான சத்யஜித் பிஸ்வாஸ் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். கிரிஷன்காஞ்ச் தொகுதி எம்எல்ஏவான சத்தியஜித் பிஸ்வாஸ், அப்பகுதியில் நடைபெற்ற சரஸ்வதி பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார்.
நிகழ்ச்சி மேடையில் இருந்து சத்தியஜித் பிஸ்வாஸ் கீழிறங்கிய நேரத்தில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சத்தியஜித்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் துப்பாக்கி குண்டு அவரின் உடலில் பாய்ந்து அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடையே பாஜக, மற்றும் அக்கட்சியின் தொண்டர்கள் தான் இந்த கொலைக்கு காரணம் என திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் கௌரி ஷங்கர் தத்தா ,குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் பாஜக இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
திருமணம் ஆகி 10 மாதங்கள்... வயதான பெற்றோர்... உயிரிழந்த வீரர் குருவின் மறுபக்கம்..!
திருமண விருந்தை ரத்து செய்து ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி
அதிவேகத்தில் பியானோ வாசித்து உலக அரங்கை அதிரவைத்த சென்னை சிறுவன்!
சிகிச்சை முடிந்து சென்னை திரும்பினார் விஜயகாந்த்..!
வாட்ஸ் அப் குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை: விரைவில் புதிய அப்டேட்
மீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா ? உரி முதல் புலவாமா வரை !
அடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா?
ரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா ?
கலைப் படைப்பா ? ஆபாச படைப்பா ? எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'
சினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் !