[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீ விபத்தில் 17பேர் உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயலை கைது செய்தது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ்
  • BREAKING-NEWS கோவை: செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்; ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS புல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

பிரதமர் மோடியின் அருணாச்சல பிரதேச வருகை... சீனா கடும் எதிர்ப்பு

india-dismisses-china-s-objection-to-pm-modi-s-arunachal-pradesh-visit

பிரதமர் மோடி அருணாச்சல பிரதேசத்துக்கு சென்ற நிலையில் அதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அருணாச்சல பிரதேசத்தை இந்தியாவின் ஒரு பகுதி என தாங்கள் ஒரு போதும் அங்கீகரிக்கவில்லை என்றும் அங்கு இந்திய தலைவர்கள் செல்வது இரு நாட்டு உறவை மேலும் சிக்கலாக்கும் என்றும் சீனா தெரிவித்துள்ளது. சீனாவின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங் இதை தெரிவித்தார். இதற்கு இந்திய வெளியுறவுத் துறை உடனடியாக பதிலடி கொடுத்துள்ளது.

அருணாச்சல பிரதேசம் என்பது இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் அதை ஒரு போதும் விட்டுத்தர முடியாது என்றும் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. தெற்கு திபெத்தின் ஒரு பகுதிதான் அருணாச்சல பிரதேசம் என சீனா நெடுங்காலமாக கூறிவருகிறது. இதுதொடர்பான எல்லை பிரச்னைக்கு இந்தியாவும் சீனாவும் 21 முறை பேச்சு நடத்தியும் தீர்வு கிடைக்கவில்லை. இந்நிலையில் அருணாச்சல பிரதேசத்திற்கு பிரதமர் உள்ளிட்ட தேசியத் தலைவர்கள் ஒவ்வொரு முறை வரும் போதும் சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close