[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS புல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

நாடாளுமன்ற கமிட்டி முன்பு ஆஜராக ட்விட்டர் அதிகாரிகள் மறுப்பு

twitter-ceo-top-officials-decline-to-appear-before-parliamentary-panel-sources

தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற கமிட்டி முன்பு ஆஜராக ட்விட்டர் அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஃபேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயன்பாட்டாளர்கள் உள்ளனர். கட்டுப்பாடு இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கும் இந்தச் சமூக ஊடங்களில், போலியான படங்கள், வீடியோ, செய்திகள் உள்ளிட்டவை நாள்தோறும் பரவுகின்றன. அதுபோன்ற தவறான தகவல்களை தடுப்பது சவால் நிறைந்ததாக இருக்கிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றிய செய்திகள் நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் வெளிவந்த வண்ணம் உள்ளன. 

        

சமூக வலைத்தளங்களில் வரும் செய்திகள், தகவல்களை உண்மையென நம்புவோரின் நம்பிக்கையை சிதைக்கும் வகையில் ஊடுருவியிருக்கும் போலிகளின் செயல்பாடு அதிகரித்து இருக்கிறது. எனவே மக்களிடத்தில் சரியான விஷயங்கள் செல்வது அவசியமாகிறது. இதற்காக தவறான தகவல்களை ஆராய்ந்து, அவற்றின் உண்மைத் தன்மையை வெளிப்படுத்த சம்பந்தப்பட்ட சமூக வலைத்தளங்களின் உதவியை மத்திய அரசு நாடி வருகிறது. 

                 

வாட்ஸ் அப், ட்விட்டர் உள்ளிட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாக பாஜக எம்.பி அனுராக் தாக்கூர் தலைமையிலான நாடாளுமன்ற கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டி நடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி ட்விட்டர் நிர்வாகத்திற்கு சம்மன் ஒன்றினை அனுப்பி இருந்தது. அந்த சம்மனில், சமூக வலைத்தள ஊடகங்களில் நிலவும் பிரச்னைகள் குறித்து கலந்துரையாட பிப்ரவரி 7ம் தேதி நடைபெறும் கூட்டத்திற்கு வருமாறு ட்விட்டர் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. பின்னர், அந்தக் கூட்டம் பிப்ரவரி 11ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், நாடாளுமன்ற கமிட்டி முன்பு ஆஜராக ட்விட்டர் அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 10 நாட்களில் வருவது என்பது மிகவும் குறைந்த கால அவகாசம் என்று ட்விட்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

               

முன்னதாக, ட்விட்டரின் சட்ட ஆலோசகர் விஜயா கட்டேவிடம் இருந்து நாடாளுமன்ற ஐடி கமிட்டிக்கு கடிதம் ஒன்று கடந்த பிப்ரவரி 7ம் தேதி வந்தது. அதில், ‘எங்களது முடிவுகளில் வேறு யாரும் தலையிட முடியாது. எங்களுடைய விதிமுறைகளின் படியே ட்விட்டர் இந்தியா செயல்படுகிறது. ஒரு ஜூனியர் நிர்வாகியை பிரதிநிதியாக அனுப்புவது சரியாக இருக்காது. ஏனெனில் அவர்களுக்கு முடிவெடுக்கும் அதிகாரம் எதுவும் கிடையாது’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், “வெளிப்படைத் தன்மை, நம்பகத்தன்மை மற்றும் பாரபட்சமின்மை போன்ற கொள்கைகளை மேற்கொள்வதில் ட்விட்டர் உறுதி பூண்டுள்ளது. எங்களது ட்விட்டர் விதிகளை அமல்படுத்த, உலக நிபுணத்துவம் வாய்ந்த சர்வதேசக் குழு உள்ளது. அதனால், ட்விட்டர் இந்தியா ஊழியர்கள் விதிமுறைகளை அமல்படுத்துவதில்லை. எந்தவொரு அரசியல் பார்வை, நம்பிக்கைகளின் அடிப்படையில் முடிவுகளை நாங்கள் எடுப்பதில்லை” என்று ட்விட்டர் இந்தியா தரப்பில் நேற்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close