[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீ விபத்தில் 17பேர் உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயலை கைது செய்தது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ்
  • BREAKING-NEWS கோவை: செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்; ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS புல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

பாஜக சார்பில் போட்டியிடுகிறேனா? சேவாக் விளக்கம்!

sehwag-rules-out-contesting-ls-elections

மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பாக போட்டியிடப் போவதாக பரவும் செய்தி குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சேவாக் பதிலளித்துள்ளார்.

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரபலங்களை இழுக்க அரசியல் கட்சிகள் முயன்று வருகின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநில சினிமா நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்களை இழுக்கும் முயற்சிகளும் நடந்து வருகின்றன. சமீபத்தில் மலையாள நடிகர் மோகன்லால், பாஜக சார்பில் கேரளாவில் போட்டியிடப் போவதாகக் கூறப்பட்டது. இதை அவர் மறுத்தார். இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், ஹரியானா மாநிலம் ரோத்தக் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடப் போவதாக செய்திகள் வெளியாகி வந்தன. இதை சேவாக் மறுத்துள்ளார். 

இதே போல 2014 ஆம் ஆண்டு வந்த செய்தியையும் இப்போதைய செய்தியையும் இணைத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ள சேவாக், ’’2014 ஆம் ஆண்டு வந்த வதந்திதான், இப்போதும். புதுமை ஏதும் இல்லை. அப்போதும் சரி, இப்போதும் சரி, அரசியலில் போட்டியிடும் எண்ணம் இல்லை’ என்று தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close