[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS புல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

“நெட்பிலிஸ், அமேசான் பிரைமுக்கு தடைபோட முடியாது” - நீதிமன்றம்

netflix-amazon-prime-can-t-be-banned-says-delhi-highcourt

டெல்லி உயர்நீதிமன்றம் நெட்பிலிஸ், அமேசான் பிரைம் ஆகியவற்றை தடைச் செய்யமுடியாது என உத்தரவு.

டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஜஸ்டிஸ் ஃபார் ரைட்ஸ்(Justice for Rights) என்ற தன்னார்வுத் தொண்டு நிறுவனம் நெட்பிலிஸ், அமேசான் பிரைம் ஆகியவற்றை தடைசெய்யவேண்டும் என்று பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவில் ஆன்லைன் தளங்கள் எந்தவிதமான நெறிமுறைகளும் இன்றி செயல்படுவதாக கூறியிருந்தது.

Image result for amazon prime

மேலும் இந்த ஆன்லைன் தளங்கள் ஆபாசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதாகவும் மனுவில் தெரிவித்திருந்தது. அத்துடன் இந்தத் தளங்கள் இந்திய தண்டனைச் சட்டத்தை மீறி செயல்படுவதாகவும் மனுவில் கூறியிருந்தது.

இன்று இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் ரன்ஜன் மேனன் மற்றும் வி.கே. ராவ் கொண்ட அமர்வு, “இந்த மனுவில் எந்தவித பொதுநலனும் இல்லை” எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது. 

கடந்த ஜனவரி மாதம் நெட்பிலிஸ், அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார், ஊட், சோனி போன்ற ஆன்லைன் நிறுவனங்கள் தங்களை சுய தனிக்கை செய்துகொள்ள உள்ளதாக அறிவித்திருந்தன. இந்த ஆன்லைன் தளங்கள் ஆபாசமான நிகழ்ச்சிகள் மற்றும் குழந்தைகள் இடம்பெறும் பாலியல் காட்சிகள் ஆகியவற்றை தணிக்கை செய்வதாக கூறியிருந்தன. 

மேலும் தங்களின் தளத்தில் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப நிகழ்ச்சிகள் தேர்ந்தெடுக்கும்படி மாற்றுவதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close