[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கி 6 போலீசார் உட்பட 10 பேர் மாயம்!

10-missing-after-avalanche-hits-jammu-srinagar-highway

ஜம்மு காஷ்மீரில் குல்காம் மாவட்டத்தில் பனிச்சரிவில் சிக்கி 6 போலீசார் உட்பட10 பேர் மாயமாகியுள்ளனர். 

ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால் சாலைகள் பனிக்கட்டிகளால் மூழ்கியுள்ளன. இந்நிலையில், குல்காம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீநகர் - ஜம்மு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள ஜவஹர் சுரங்கம் அருகே பனிச்சரிவு ஏற்பட்டது. இங்கிருந்த போலீஸ் நிலையமும் இதில் சிக்கியது. இதில் 10 பேர் பனிச்சரிவில் சிக்கிக்கொண்டனர். இதில் 6 பேர் போலீசார் எனவும் 2 பேர் தீயணைப்பு படை வீரர்கள் என்றும் 2 பேர் கைதிகள் என்றும் தெரியவந்துள்ளது. பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால், அவர்களை மீட்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. 

கடும் பனிப்பொழிவு காரணமாக சாலைகள் தெளிவாக தெரியாததால், ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை 2-வது நாளாக மூடப்பட்டுள்ளது. ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close