[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது

‘ஆடை அணிவது என் தனிப்பட்ட சுதந்திரம்’ - ரஹ்மான் மகள் கருத்து

ar-rahman-blasts-haters-trolling-him-for-daughter-khatija-s-niqab-in-an-epic-way

ஆடை சர்ச்சை குறித்து ரஹ்மானின் மகள் கதிஜா தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் விளக்கம் அளித்தார்.

‘சிலம்டாக் மில்லியனயர்’ படத்தின் 10ம் ஆண்டு கொண்டாட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ரஹ்மானின் மகள் கதிஜா கலந்து கொண்டு உருக்கமாக பேசினார். இத்தனை ஆண்டுகள் ஆகியும் தன்னுடைய தந்தை ஒரு இம்மியளவும் கூட மாறவில்லை, ஆஸ்கர் விருது பெற்ற பின்புகூட மாறவில்லை என்று அவர் பேசினார். 

                 

ஆனால், நிகழ்ச்சி முடிந்த பின்னர், ரஹ்மான் பேசியதோ, மற்றவர்கள் பேசியதோ ட்ரோல் ஆனதை காட்டிலும், அந்த நிகழ்ச்சியில் கதிஜா இஸ்லாமியர்களின் பர்தா அணிந்திருந்தது ட்ரோல் ஆனது. ரஹ்மான் தன்னுடைய மகளை கட்டாயப்படுத்தி பர்தா அணிய சொல்வதாக பலரும் கூறியிருந்தனர். ரஹ்மான் வீட்டிற்குள் ஒரு மாதிரியும், வெளியே ஒரு மாதிரி நடந்து கொள்வதாகவும் விமர்சித்தனர். 

இதனையடுத்து, ரஹ்மானின் மகள் கதிஜா தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் சர்ச்சை குறித்து விளக்கம் அளித்தார். தான் ஆடை அணிவதற்கு தன்னுடைய பெற்றோர்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும் அனைத்தும் தன்னுடைய விருப்பம் சார்ந்ததே என்று கூறியிருந்தார். 

                    

அந்தப் பதிவில், “நான் உடுத்தும் உடையோ அல்லது என் வாழ்க்கையில் நான் தேர்வு செய்யும் எந்த ஒன்றிற்கும் எனது பெற்றோர்களுக்கு கொஞ்சம்கூட சம்பந்தம் கிடையாது என்பதை தெரிவித்து கொள்ள விரும்புகிறேன். நான் முழுமையாக ஏற்று, சொந்த விருப்பத்துடன்தான் பர்தாவை அணிந்திருக்கிறேன். 

என் வாழ்க்கையில் எது வேண்டுமென்பதை தேர்ந்தெடுக்கும் அளவுக்கு நான் பக்குவமடைந்து விட்டேன். எந்த ஒரு தனி மனிதனுக்கும் அவர்கள் எந்த உடையை அணிய வேண்டும், எப்படி வாழவேண்டும் என்ற சுதந்திரம் இருக்கிறது. அந்தச் சுதந்திரத்தைதான் நானும் அனுபவித்து வருகிறேன். நான் என்னவாக இருக்கிறேன் என்ற நிலை தெரியாமல், யாரையும் எடை போடாதீர்கள்” என்று காட்டமாக தெரிவித்து இருந்தார். 

           

அதேபோல், இந்தச் சர்ச்சைகளுக்கு பதில் அளிக்கும் வகையில் ஏ.ஆர்.ரஹ்மானும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இன்று ஒரு பதிவிட்டுள்ளர். அதாவது, தன்னுடைய மகள்கள் நீடா அம்பானி உடன் இருப்பது போன்ற படத்தினை பதிவிட்டுள்ளார். அதோடு,  முக்கியமான பதிவை தன்னுடைய #freedomtochoose என்ற ஹேஷ்டேக்கையும் பதிவிட்டுள்ளார்.

               

இது ஒருபுறம் சென்று கொண்டிருக்க, நடிகை ரதிகா மகள் பதிவிட்ட ஒரு போட்டாவும் ட்ரோல் ஆகியுள்ளது. ராதிகாவின் முன்னாள் கணவர் மகள் ரயானே மிதுன். இவருக்கு கடந்த ஆண்டு குழந்தை ஒன்று பிறந்தது. ராதிகாவின் கணவரும் நடிகருமான சரத்குமார் அந்தக் குழந்தையை மடியில் வைத்திருப்பது போன்ற படத்தை ரயானே தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இந்தப் படம் ட்ரோல் ஆகவே, விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் ரயானே ஒரு ட்விட் பதிவிட்டுள்ளார். 

                

அந்தப் பதிவில், “இதுபோன்ற உலகத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆம், தந்தை மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவர். அவர் ஏன் அப்படி இருக்க கூடாதா? அவருக்கு அற்புதமான மனைவி கிடைத்துள்ளார். நான்கு பிள்ளைகள், ஒரு பேரக் குழந்தை இருக்கிறார்கள். அவரை விரும்புகிற ஒரு குடும்பம் இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close