[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS திருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது!
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்
  • BREAKING-NEWS “மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை
  • BREAKING-NEWS நிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு

ஓட்டுநரை துண்டு துண்டாக வெட்டி உடலை அமிலத்தில் கரைத்த மருத்துவர்

doctor-killed-driver-in-madhya-pradesh

(படத்தில் சுனில் மந்திரி)

மத்தியப் பிரதேசத்தில் தகாத உறவை கண்டித்த ஓட்டுநரை துண்டு துண்டாக வெட்டி உடலை அமிலத்தில் கரைத்த மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மத்தியப் பிரதேசத்தின் ஹோசங்கா பாத்தைச் சேர்ந்த மருத்துவர் சுனில் மந்திரி. இவருக்குத் தனது கார் ஓட்டுநரான பீரேந்திரா என்பவரின் மனைவியுடன் தொடர்பு இருந்துள்ளது. இது குறித்து மருத்துவர் சுனில் மந்திரியை, ‌பீரேந்திரா கண்டித்துள்ளார்.

இந்நிலையில் பல் வலிப்பதாக மருத்துவரின் வீட்டுக்கு பீரேந்திரா சென்றுள்ளார். அப்போது அவருக்கு மயக்க மருந்தை ஊசியில் செலுத்திய ‌சுனில் மந்திரி, பீரேந்திராவைத் துண்டு துண்டாக வெட்டி உடல் பாகங்களை அமிலத்தில் கரைத்துள்ளார். இரண்டு நாட்களாக மருத்துவர் சுனில் மந்திரியின் நடவடிக்கையில் மாற்றமுள்ளதை அறிந்த ‌அண்டைவீட்டார் காவல்துறையினரிடம் தெரிவித்தனர்.

காவல்துறையினர் சுனில் மந்திரியிடம் விசாரித்தபோது, அமிலத்தில் கிடந்த உடல் பாகங்களையும், சிதறிய ரத்ததையும், மருத்துவரின் சட்டையையும் கண்டெடுத்துள்ளனர். இதனையடுத்து பீரேந்திராவைத் துண்டு துண்டாக வெட்டிக் கொன்றதை ஒப்புக்கொண்ட மருத்துவர் சுனில் மந்திரியைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close