[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட பிப்.24 முதல் விருப்பமனு விநியோகம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.02 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.25 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS பயங்கரவாதத்தை ஒடுக்க இந்தியாவுக்கு உதவுவோம்- சவுதி அரேபியா
  • BREAKING-NEWS பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனே விடுதலை செய்ய ஆளுநரை சந்தித்து முதல்வர் வலியுறுத்த வேண்டும்- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS தேமுதிகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கும் நிலையில் முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி முக்கிய ஆலோசனை
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலையொட்டி சென்னையில் 113 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு
  • BREAKING-NEWS விவசாயிகளுக்கு பட்ஜெட்டில் அறிவித்தபடி ரூ.6ஆயிரம் 3 தவணையாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது

சபரிமலை தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம் 

supreme-court-upholds-sabarimala-judgment

சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்ல எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

முன்னதாக, சபரிமலையில் ஐயப்பன் கோயிலுக்கு செல்ல 10 வயது 50 வயது வரையிலான பெண்களுக்கு தடை இருந்தது. இதனை எதிர்த்து பலரும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலில் சென்று வழிபடலாம் எனக் கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது. அதிலிருந்து சபரிமலையில் பல்வேறு போராட்டங்கள் வெடித்து வருகின்றன. 

அதன்பின்னர் சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்துகொண்டு செல்லும் சீசனில், பெண் பக்தர்கள் சிலரும் வருகை தந்தனர். அவர்களுக்கு ஐயப்ப பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க, பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. இறுதியில் இரண்டு பெண்கள் மட்டும் அதிகாலை நேரத்தில் சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்துவிட்டனர் என்ற தகவல்கள் வெளியானது. 

இதனிடையே அகில இந்திய ஐயப்ப சேவா சங்கம் மற்றும் நாயர் சேவா சங்கள் உள்ளிட்ட அமைப்புகள், பெண்களை அனுமதிக்க உத்தரவிட்டு வழங்கிய தீர்ப்பை மறுசீராய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் திருந்திருந்தனர். அந்த மறுசீராய்வு மனு நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் இன்று விசாரிக்கப்பட்டது.

அப்போது சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்பதற்கு கோயில் தேவசம் போர்டு ஒப்புதல் தெரிவித்தது. உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பை ஏற்பதாகவும் இத்தனை நாட்கள் பின்பற்றி வந்த தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வதாகவும் தேவசம் போர்டு பதிலளித்தது. 

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவுற்ற நிலையில் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய விரும்பினால் தாக்கல் செய்யலாம் எனக் கூறி தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close