[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர்; எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS குடிநீர் பிரச்னைகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் லாரி மூலம் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது

பெண் பெயரில் வாட்ஸ் அப் சாட்; பொறி வைத்து கொலை செய்யப்பட்ட தொழிலதிபர்!

telugu-nri-businessman-killed-for-unpaid-loans

பெண் பெயரில் வாட்ஸ் அப் சாட் செய்து தனியாக வரவழைக்கப்பட்டு, தொழிலதிபர் கொலை செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஆந்திராவின் விஜயவாடா அருகே கிருஷ்ணா மாவட்டத்தில் ஜனவரி 31ம் தேதி காரிலேயே கொலை செய்யப்பட்ட நிலையில் தொழிலதிபர் உடல் கண்டெடுக்கப்பட்டது. கொலை செய்யப்பட்டவர் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல தொழில்களை செய்து வந்த ஜிகுருப்பட்டி ஜெயராம் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். சமீப ஆண்டுகளாக வெளிநாட்டில் வசித்து வந்த ஜெயராம் ஆந்திராவுக்கு வந்தது ஏன்? அவரை கொலை செய்தது யார் ? என்று தெரியாமல் போலீசார் திணறி வந்தனர். இந்நிலையில் ஜெயராம் கொலையில் போலீசார் துப்புதுலக்கியுள்ளனர். கொலையாளி ராகேஷ் ரெட்டியையும் போலீசார் கைது செய்துள்ளனர். 

கொலை தொடர்பான விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்களை ஜெயராம் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கொலை தொடர்பாக பேசிய காவல்துறை அதிகாரி, தொழிலதிபர் ஜெயராம் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

மேலும் தெரிவித்த அவர், ''தொழிலதிபர் ஜெயராம் புளோரிடாவில் வசித்து வந்துள்ளார். அடிக்கடி தொழில்ரீதியாக ஹைதராபாத் வந்து செல்வது அவரது வழக்கம். அவர் ராகேஷ் ரெட்டியிடம் பல கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளார். ஆனால் தொழில் நஷ்டப்படவே கடனை திருப்பி கொடுக்காமல் இருந்துள்ளார். கடனை திருப்பிக்கேட்டு ராகேஷ் தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வெளிநாட்டுக்கு சென்ற ஜெயராம், ராகேஷை முற்றிலும் தவிர்த்துள்ளார். ராகேஷ் தொடர்பான செல்போன் எண்களையும் பிளாக் செய்துள்ளார். இதனால் ஜெயராமை இந்தியாவுக்கு கொண்டு வர ராகேஷ் திட்டமிட்டுள்ளார். அதற்காக பெண்ணின் பெயரில் வாட்ஸ் அப் எண்ணை தயார் செய்து ஜெயராமனுடன் தொடர்ந்து சாட் செய்துள்ளார். 

பெண் பேசுவது போலவே பேசி ஜெயராமனை இந்தியாவுக்கு வர வழைத்துள்ளார். மேலும் தனியாக சந்திக்க வேண்டுமென்று கூறி ஜெயராமை ஜூபிலி மலைப்பகுதிக்கு வரவழைத்த அவரை ராகேஷும் அவரது கூட்டாளிகளும் கொலை செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார். மேலும் ஜெயராமின் உடலை அப்புறப்படுத்த இரண்டு தெலங்கானா போலீசாரும் உதவி செய்துள்ளதாக தெரிவித்தார்.

சிசிடிவி காட்சிகளை கொண்டு நடத்தப்பட்ட விசாரணையை வைத்தே கொலையாளி கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஜெயராமனின் உடல் அருகே கிடந்த காலி மது பாட்டில்களை கொண்டு விசாரணையை தொடங்கிய காவல்துறையினர், அதே மாதிரியான மது பாட்டில்களை வாங்கியவர்களை சிசிடிவி மூலம் கண்டுபிடித்து கொலையில் துப்புதுலக்கியுள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close