[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS ஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும்; சோலைவனம் பாலைவனம் ஆகாது - தமிழிசை
  • BREAKING-NEWS 6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்
  • BREAKING-NEWS டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்

பீகாரில் சத்துணவு ஊழியர்கள் போராட்டம் ! பசியால் அவதியுறும் மாணவர்கள்

over-two-lakh-cooks-leave-kids-hungry-in-bihar-schools

பீகாரில் கடந்த ஒரு மாதமாக 2 லட்சத்திற்கும் அதிகமான சத்துணவு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மாணவர்கள் பள்ளியில் இலவச மதிய உணவு உண்ண முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

பீகாரில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஜனவரி 7-ஆம் தேதி சத்துணவு ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாநிலம் முழுவதும் கிட்டத்தட்ட 2 லட்சத்திற்கும் அதிகமான சத்துணவு ஊழியர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சத்துணவு ஊழியர்களின் போராட்டத்தால் பள்ளியில் பயிலும் மாணவர்கள் இலவச மதிய உணவு உண்ண முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே கடந்த சில வாரங்களில் பள்ளிகளில் மாணவர்களின் வருகைப்பதிவும் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. சத்துணவு வழங்கப்படாத காரணத்தினால் தான் மாணவர்களின் வருகை குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேசமயம் அரசு அதிகாரிகள் இதுகுறித்து கூறும்போது, மாநிலத்தின் சில பகுதிகளில் கடுங்குளிர் நிலவுகிறது. இதன் காரணமாகவே மாணவர்களின் வருகைப் பதிவு குறைந்துள்ளதாக தெரிவித்தனர்.

இதனிடையே வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள சத்துணவு ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப அரசு கேட்டுக்கொண்டுள்ளது. மீறி போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்தது. ஆனால் எச்சரிக்கையை பொருட்படுத்தால் சத்துணவு ஊழியர்கள் போராட்டம் தொடர்கிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close