[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீ விபத்தில் 17பேர் உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயலை கைது செய்தது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ்
  • BREAKING-NEWS கோவை: செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்; ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS புல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

’உங்கள் சான்றிதழ் தேவையில்லை’: ராகுல் காந்திக்கு, நிதின் கட்கரி பதில்!

don-t-need-your-certificate-nitin-gadkari-pans-rahul-gandhi

’’எனக்கு உங்கள் சான்றிதழ் தேவையில்லை’’ என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பதில் அளித்துள்ளார். 

பாஜக மாணவர் அமைப்பான அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்தின் முன்னாள் தொண்டர்கள் கூட்டம் நாக்பூரில் நடந்தது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசும்போது, ‘’தான் நாட்டுக்காகவும், பாஜகவுக்கும் மட்டுமே வாழ்வதாகவும், தன் வாழ்வை கட்சிக்கு அர்ப்பணிக்க உள்ளதாகவும் கூறும் பலரை சந்தித்துள்ளேன். ஒருவரிடம் உங்கள் குடும்ப நிலை என்ன என்று கேட்டேன். அதற்கு அவர், தான் கடை நடத்தியதாகவும் வியாபாரம் சரியாக நடக்கவில்லை என்பதால் மூடிவிட்டதா கவும் தெரிவித்தார். மேலும் தனக்கு மனைவி, குழந்தைகள் இருப்பதாகவும் தெரிவித்தார். 

முதலில் குடும்பத்தை கவனியுங்கள்’ என்று அவருக்கு அறிவுரை கூறினேன். குடும்பத்தை கவனிக்க முடியாதவரால் நாட்டை கவனிக்க முடியாது. முதலில் உங்கள் குடும்பத்தையும், குழந்தைகளையும் கவனியுங்கள். பிறகு நாட்டுக்கும் கட்சிக்கும் பணியாற்றுங்கள் என்று கூறினேன்'' என்று தெரிவித்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ’’பாஜகவில் சிறிதளவு தைரியம் கொண்ட ஒரே நபர், நிதின் கட்கரி என்றும், ரபேல் விவகாரம், விவசாயிகளின் துயரம் மற்றும் சிபிஐ, ஆர்பிஐ போன்றவற்றின் அழிவு குறித்தும் கட்கரி பேச வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்.

பிறகு மற்றொரு ட்விட்டில், ’’மன்னித்துவிடுங்கள். இன்னொன்றை மறந்துவிட்டேன். அது வேலை வாய்ப்பு. அதுபற்றியும் பேசுங்கள்’’ என்று ராகுல் காந்தி கூறியிருந்தார்.

இதற்கு ட்விட்டரில் இந்தியில் பதில் அளித்துள்ள அமைச்சர் நிதின் கட்கரி, ’’ராகுல்ஜி, உங்கள் சான்றிதழ் எனக்குத் தேவை யில்லை. ஒரு தேசிய கட்சியின் தலைவர், பத்திரிகைகளில் தவறாக திரித்து வெளியான செய்தியை ஆதாரமாகக் கொண்டு எங்கள் அரசை தாக்குவது ஆச்சரியமாக இருக்கிறது. மற்றவர்களின் தோளை ஆதரவாக பிடித்துக்கொண்டு நீங்கள் பேசுவது தான் பிரதமர் மோடி மற்றும் எங்கள் அரசின் பலம்’’ என்றார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close