[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜெயலலிதாவின் படத்தை சட்டமன்றத்தில் வைக்க எதிர்ப்பு தெரிவித்தவர் விஜயகாந்த் என்பதால் அவருடன் கூட்டணி வைத்தால் தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள் - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS தேமுதிகவோடு தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம்; ஓரிரு நாட்களில் கூட்டணி அமையும் - மதுரை விமானநிலையத்தில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
  • BREAKING-NEWS மதுரையில் பாஜக, அதிமுக நிர்வாகிகளை சந்திக்கவில்லை - த.மா.கா தலைவர் வாசன் புதிய தலைமுறைக்கு பேட்டி
  • BREAKING-NEWS வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக வெற்றி பெறும் - ராமநாதபுரம் பாஜக பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேச்சு
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட பிப்.24 முதல் விருப்பமனு விநியோகம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.02 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.25 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS பயங்கரவாதத்தை ஒடுக்க இந்தியாவுக்கு உதவுவோம்- சவுதி அரேபியா

"உயிரையும் விடத் தயார், சமரசம் கிடையாது":  மம்தா பானர்ஜி உறுதி

mamta-banerjee-says-no-compromise-in-this-cbi-issue

மேற்கு வங்க காவல்துறைக்காக தமது உயிரையும் விடத் தயாராக இருப்பதாகவும், இதில் சமரசம் செய்துகொள்ளப்போவதில்லை என்றும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை விசாரிக்க, அவரது வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் நேற்று சென்றனர். அப்போது அவர்களை கொல்கத்தா காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். பின்னர் சிபிஐ அதிகாரிகளை கொல்கத்தா போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். பின்பு விடுவிக்கப்பட்டனர். இதனால் மேற்குவங்க மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஆணையர் ராஜீவ்குமார் இல்லத்திற்கு விரைந்த முதல்வர் மம்தா பானர்ஜி, அம்மாநில டிஜிபி உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து சிபிஐ அதிகாரிகளின் நடவடிக்கையை கண்டித்தும், நாட்டின் அரசமைப்புச் சட்டத்தை காக்க வலியுறுத்தியும் முதல்வர் மம்தா பானர்ஜி தர்ணாவை தொடங்கி நடத்தி வருகிறார்.

Image result for mamtha banerjee

இரண்டாவது நாளாக தமது தர்ணா போராட்டத்தை தொடர்ந்து வரும் மம்தா பானர்ஜி, காவல்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இன்று உரையாற்றினார். அப்போது திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை மத்திய அரசு தொட்டபோது தாம் தெருவில் இறங்கி போராடவில்லை என சுட்டிக்காட்டிய அவர், ஆனால் கொல்கத்தா காவல் ஆணையர் பதவியை அவமானப்படுத்த முயன்றதால் தாம் சாலையில் இறங்கி போராடுவதாக குறிப்பிட்டார். தமது போராட்டம் 8ம் தேதி வரை தொடரும் என குறிப்பிட்ட மம்தா, போராட்டத்தை தொடர்வது குறித்து அதன் பின்னர் முடிவு செய்யப்படும் என அறிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close