[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு
  • BREAKING-NEWS தனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS ஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்

மோடி அரசின் அராஜகங்களுக்கு எதிரானதே என் போராட்டம் - மம்தா பானர்ஜி

my-satyagraha-is-aginst-modi-government-s-atrocities-mamta-banerjee

மோடி அரசின் அராஜகங்களுக்கு எதிரானதே தனது சத்தியாகிரக போராட்டம் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை விசாரிக்க, அவரது வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் நேற்று சென்றனர். அவர்களை கொல்கத்தா போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. சிபிஐ அதிகாரிகளை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் மத்திய அரசு, கூட்டாட்சி அமைப்பை சிதைக்கப் பார்க்கிறது என்றும் கூறி மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மம்தா பானர்ஜியின் போராட்டத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள மம்தா பானர்ஜி, எந்தவொரு அமைப்புக்கும் எதிராக தான் சத்தியாகிரக போராட்டம் நடத்தவில்லை என்றும், மோடி அரசின் அராஜகங்களை கண்டித்தே தனது சத்தியாகிரக போராட்டம் தொடர்வதாகவும் கூறியுள்ளார். இதனிடையே,  சாரதா நிதி நிறுவன மோசடி விவகாரத்தில் கொல்கத்தா கா‌‌வல் ஆணையர் ராஜீவ் குமாரை விசாரணைக்கு ஒத்துழைக்க உத்தரவிடுமாறு சிபிஐ தொடர்ந்த மனுவை உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:

[X] Close