[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீ விபத்தில் 17பேர் உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயலை கைது செய்தது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ்
  • BREAKING-NEWS கோவை: செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்; ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS புல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

மேற்கு வங்கத்தில் அரசமைப்பு சாசன மீறல் : ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

home-minister-rajnath-singh-speaks-west-bengal-cbi-issue-in-lok-sabha

மேற்கு வங்காள நிகழ்வுகள் அரசமைப்பு சா‌சனம் மீறலை குறிப்பதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டினார்.

நிதி நிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையரை விசாரிக்க வந்த சிபிஐ அதிகாரிகளை, மேற்குவங்க காவல்துறையினர் தடுத்து நிறுத்தி சிபிஐ அதிகாரிகளை காவல்நிலையம் அழைத்து சென்று, பின்னர் விடுவித்தனர். இதனால் மேற்குவங்க மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஆணையர் ராஜீவ்குமார் இல்லத்திற்கு விரைந்த முதல்வர் மம்தா பானர்ஜி, அம்மாநில டிஜிபி உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார்.

Image result for mamtha banerjee

இதைத்தொடர்ந்து சிபிஐ அதிகாரிகளின் நடவடிக்கையை கண்டித்தும், நாட்டின் அரசமைப்புச் சட்டத்தை காக்க வலியுறுத்தியும் முதல்வர் மம்தா பானர்ஜி தர்ணாவை தொடங்கி நடத்தி வருகிறார். மேலும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சமாஜ்வதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் மம்தாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்த வருகின்றனர். 

Image result for rajnath singh in lok sabha

இந்நிலையில் மேற்கு வங்காளத்தில் அரசமைப்பு சாசனம் மீறப்பட்டதாக கருத இடமிருப்பதாகவும் இதுபோன்ற சூழல்களில் நாட்டின் எந்த ஒரு மாநிலத்திலும் அமைதியை பராமரிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு இருப்பதாகவும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரித்துள்ளார். மக்களவையில் பலத்த கூச்சல் குழப்பத்திற்கிடையில் பேசிய அவர், சிபிஐ அமைப்பு தனது பணியைச் செய்ய விடாமல் தடுக்கப்பட்டது நாட்டில் இதுவே முதல்முறை என்றும் தெரிவித்தார். மேற்கு வங்க அரசின் செயல் நாட்டின் கூட்டாட்சி தத்துவத்திற்கு விடப்பட்ட‌ மிரட்டல் என்றும் ரா‌ஜ்நாத் சிங் கவலை தெரிவித்தார். காவல் ஆணையர் ராஜிவ் குமாரை விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து கொல்கத்தாவில் 2வது நாளாக மம்தாவின் தர்ணா போராட்டம் நீடிக்கும் நிலையில் ராஜ்நாத் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close