திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான கோவிந்தராஜ சுவாமி கோவிலில் 3 தங்க கிரீடங்கள் மாயமானது பரபரப்பை ஏற் படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் கீழ் திருப்பதியில் திருமலை- திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான கோவிந்தராஜ சுவாமி கோவில் உள்ளது. இங்கு, உற்சவ மூர்த்திகளுக்கு அலங்கரிக்கப்படும் 3 தங்க கிரீடங்கள் மாயமாகி உள்ளன. இத்தகவல் நேற்று மாலை யில் கோவிலில் பணியிலிருந்த அர்ச்சகர்கள் மூலம் தெரிய வந்தது.
இதையடுத்து தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் போலீசார் நள்ளிரவு முதல் விசாரணையை தொடங்கினர். பணியில் இருந்த அர்ச்சகர்கள், ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். காணாமல் போன கிரீடத்தை கண்டு பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கண்காணிப்பாளர் அன்புராஜ் தெரிவித் துள்ளார்.
கோவிந்தராஜ சாமி கோவிலில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும், அவர்கள் ஆய்வு செய்து வருகி ன்றனர். திருப்பதியில் தங்க கிரீடங்கள் மாயமாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஷ சாராயம் குடித்து 32 பேர் உயிரிழப்பு - அசாமில் சோகம்
கடுமையான வறுமையிலும் படித்து டிஎஸ்பி ஆன சரோஜா
‘கிஷான் மார்ச் 2.0’ - மும்பையை நோக்கி விவசாயிகள் மீண்டும் பேரணி
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி - சொந்த சின்னத்தில் போட்டி
உலகளவில் முதலிடம் பிடிக்கபோகும் இந்திய மக்களவை தேர்தல் 2019