[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS பிகில் திரைப்பட வெளியீட்டிற்கு தடை கோரிய வழக்கு. இன்று உத்தரவு பிறப்பிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

திரிணாமூல் - பாஜக இடையே நடக்கும் பேனர் போர் 

narendra-modi-mamata-banerjee-poster-war-in-west-bengal-ahead-of-pm-s-visit

மேற்கு வங்காளத்தில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று செல்ல உள்ள நிலையில் அங்கு பேனர் போர் நடைபெற்று வருகிறது.

பாஜக சார்பில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டங்களில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று மேற்கு வங்காளம் சென்றுள்ளார். அங்குள்ள தாகூர் நகர் மற்றும் துர்காபூர் ஆகிய பகுதிகளில் பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேச உள்ளார்.

2019 நாடாளுமன்ற தேர்தலுக்காக பிரதமர் மோடி கலந்து கொள்ளும் முதல் பொதுக்கூட்டம் இதுவாகும். மேலும், சுமார் 300 கி.மீ. தொலைவிலான மின்மயமாக்கப்பட்ட ரெயில்வே பாதையை தொடங்கி வைக்க உள்ளார்.

இதற்காக பாஜக சார்பில் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் உள்ள சாலைகளில் வரிசையாக மோடி உருவம் பதித்த வரவேற்பு பேனர்கள் வைத்துள்ளனர். 

இந்நிலையில், பாஜகவின் பேனர்களை மறைத்து ஆளும் மாநில கட்சியான மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸ் பேனர் வைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுதுள்ளது. இதனால் அங்கு திரிணாமூல் - பாஜக இடையே பேனர் போர் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து பாஜகவின் தேசிய செயலாளர் ராகுல் சின்ஹா கூறுகையில், “நிகழ்ச்சி நடைபெறும் இடத்திலிருந்து 50 - 70 மீட்டர் தூரத்தில் பிரதமர் மோடியின் பேனரை மறைத்து முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் பேனர் வைக்கப்பட்டுள்ளது. இதுவே மேற்கு வங்காளத்தில் ஜனநாயகம் இல்லை என்பதற்கு ஆதாரம். இதை எதிர்த்து பாஜகவின் கேள்வி எழுப்பினால் தாக்கப்படுகிறார்கள்” எனத் தெரிவித்தார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close