[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
  • BREAKING-NEWS இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

“பட்ஜெட்டில் போலியான புள்ளி விவரங்கள்” - ப.சிதம்பரம் 

p-chithambaram-speech-about-central-budget

போலியான புள்ளி விவரங்களின்படி பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

2019ஆம் ஆண்டின் மத்திய இடைக்கால பட்ஜெட்டை தற்காலிக நிதியமைச்சர் பியூஷ் கோயல் தாக்கல் செய்தார். அப்போது, ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் வரை இருந்தால் வரி செலுத்த வேண்டாம், வருமான நிரந்தரக் கழிவு ரூ.40 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரமாக உயர்வு, 2 ஹெக்டர் வரை உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரம் என மூன்று தவணைகளாக ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும், மீனவர்களின் நலனுக்காக தனியாக மீன்வளத்துறை அமைச்சகம் புதியதாக உருவாக்கப்படும், மாதம் ரூ 15000 வரை ஊதியம் பெறும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாத ஓய்வூதியம் குறைந்தபட்சம் ரூ.3000 வழங்கப்படும், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஆண்டுக்கு ஒருமுறை வரித்தாக்கல் செய்தால் போதும், ராணுவத்திற்கு ரூ.3 லட்சம் கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு, பணிபுரியும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு 26 வாரங்களாக அதிகரிப்பு, பிஎஃப் சந்தாதாரர் உயிரிழந்தால் வழங்கப்படும் நிவாரண நிதி 6 லட்சமாக உயர்வு ஆகிய அறிவிப்புகள் வெளியாகின. 

இந்நிலையில், இதுகுறித்து முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். மின்சேவை, கழிப்பறைகள், சமையல் சிலிண்டர் உள்ளிட்ட அனைத்து துறையிலும் தவறான விவரம் தரப்பட்டுள்ளது எனவும் தவறான தகவல்களை பரப்பி மத்திய அரசு உண்மைகளை மறைக்க முயற்சிப்பதாகவும் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

போலியான புள்ளி விவரங்கள் மூலம் பெரும் வளர்ச்சி அடைந்து இருப்பது போல் காட்டப்பட்டுள்ளது எனவும் நாட்டு மக்களை குழப்பத்தில் ஆழ்த்தவே பாதி பட்ஜெட் ஆங்கிலத்திலும் மற்றொரு பாதி இந்தியிலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

மீனவர்களுக்கு தனித்துறை மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் மீனவர் நல்வாழ்வுக்காக நிதி ஒதுக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் பரப்புரைபோல் சலுகை அறிவித்து இடைக்கால பட்ஜெட்டாக இல்லாத முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனவும் பட்ஜெட்டை பற்றி ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால் வாக்குகளுக்கான கணக்கு எனவும் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close