[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது
  • BREAKING-NEWS பால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

“பட்ஜெட் அறிவிப்பால் மக்களுக்கு உற்சாக மனநிலை உருவாகும்” - பியூஷ் கோயல்

piyush-goyal-says-people-will-happy-by-budget

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மூலம் மக்கள் மத்தியில் உற்சாக மனநிலை உருவாகும் என மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

2019ஆம் ஆண்டின் மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்காலிக மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட்டில் முக்கிய எதிர்பார்ப்பாக கருதப்பட்ட ஒரு விஷயம் மாத சம்பளம் பெறுவோரின் தனிநபர் வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்படும் என்பதுதான். இந்நிலையில் தனிநபர் வருமானம் ரூ.5 லட்சம் வரை இருக்கும் பட்சத்தில் வரி செலுத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் வெளியாகியுள்ளது.

          

பட்ஜெட் கூட்டத்தொடருக்குப் பின்னர் விளக்கமளித்து பேசிய பியூஷ் கோயல், “பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மூலம் மக்கள் மத்தியில் உற்சாக மனநிலை உருவாகும். அனைத்து தரப்பு மக்களின் முன்னேற்றத்திற்கும் இந்த பட்ஜெட் உதவும். விவசாயிகள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களின் மேம்பாட்டிற்கு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

ரூ.6,000 நிதியுதவி மூலம் 12 கோடி சிறு விவசாயிகள் பயனடைவர். 5 ஏக்கர் வரை நிலமுள்ள விவசாயிகளுக்கு 2018 டிசம்பர் முதல் கணக்கிடப்பட்டு முன்தேதியிட்டு நிதி வழங்கப்படும். முந்தைய ஆட்சியில் திட்டங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டன. எதுவும் செயல்படுத்தப்படவில்லை. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் வகையில் ஓய்வூதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close