[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் உதவித்தொகை - பட்ஜெட்டில் அறிவிப்பு

central-budget-2019-finance-minister-piyush-goyal-speech

விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் உதவித்தொகையாக வழங்கப்படும் என்று மத்திய இடைக்கால பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார்.

2019ஆம் ஆண்டின் மத்திய இடைக்கால பட்ஜெட்டை தற்காலிக நிதியமைச்சர் பியூஷ் கோயல் தாக்கல் செய்து வருகிறார். அவர் உரையாற்றிய போது, “உலகின் முக்கிய பொருளாதார நாடாக இந்தியா கடந்த 5 ஆண்டுகளில் உருவாகியுள்ளது. பணவீக்க விகிதத்தை கட்டுப்படுத்தாமல் இருந்திருந்தால் குடும்பங்களில் 35% செலவு கூடியிருக்கும். பணவீக்க விகிதம் இரட்டை இலக்கத்தில் இருந்த நிலை மாறி, இப்போது மிகவும் குறைந்துள்ளது. நடப்பு நிதியாண்டில் நாட்டின் வளர்ச்சி 7% மேல் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் பொருளாதார சீர்த்திருந்தங்கள் விரைவாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

வங்கித்துறை சீர்திருத்தங்கள் சிறந்த பலனை தரத் தொடங்கியுள்ளன. 2022ஆம் ஆண்டிற்குள் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாகும். வங்கிகளின் வாராக்கடன் குறித்து 5 ஆண்டுகளுக்கு முன்னர் யாரும் கவனிக்கவில்லை. 7 ஆண்டுகளுக்கு முன் இருந்த 6% ஆக இருந்த நிதிப்பாற்றாக்குறை தற்போது 3% சதவிகமாகியுள்ளது. கடுமானத்துறை சட்டம், பினாமி தடுப்பு சட்டம் ஆகியவை ஊழலை தடுத்துள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் திறந்தவெளி மலம் கழிக்கும் நிலை மாற்றப்பட்டுள்ளது. நிதிப் பற்றாக்குறை திருத்தப்பட்ட பட்ஜெட் 2018-19 மதிப்பீட்டில் 3.4 % குறைக்கப்பட்டுள்ளது. 

விலைவாசி உயர்வு வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு 32% இருந்த 42% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நிலக்கரி மற்றும் ஸ்பெக்ட்ரம் ஏலம் வெளிப்படையாக நடத்தப்பட்டுள்ளது. உலகின் பொருளாதார வளர்ச்சியில் 11வது இடத்தில் இருந்து 6வது இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது. ஊரக சுகாதாரம் 98 % உறுதி செய்யப்பட்டு 5.45 லட்சம் கிராமங்கள் திறந்தவெளி கழிப்பிடமில்லாதவையாக மாற்றப்பட்டுள்ளன. ஊரக வேலைத்திட்டத்திற்கு தேவைப்பட்டால் இன்னும் கூடுதல் நிதி ஒதுக்கப்படும். 1.5 கோடி வீடுகள் பிரதம மந்திரியின் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ளன. 

இந்தியாவில் மின்சாரம் இல்லாத வீடுகளே இல்லாத நிலை மார்ச் மாதத்திற்குள் உருவாகும். எல்.இ.டி பல்புகள் மூலம் ரூ.50 ஆயிரம் கோடி செலவு மிச்சமாகியுள்ளது. 22 விவசாய பொருட்களின் ஆதார விலை 50% உயர்த்தப்பட்டுள்ளது. 10 லட்ச மக்கள் ஆயூஷ்மான் பாரத் திட்டம் மூலம் மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளனர். சிறுகுறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும். ரூ.6 ஆயிரம் மூன்று தவணைகளாக வங்கிக் கணக்குகளில் ரூ.2 ஆயிரமாக வழங்கப்படும். 2 ஹெக்டர் நிலமுள்ள விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும். விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்திற்கு ரூ.75 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீனவர்களின் நலனுக்காக தனியாக மீன்வளத்துறை உருவாக்கப்படும்” என தெரிவித்தார்.  
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close