[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS மக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து கொண்டோரை தமிழக அரசு துன்புறுத்துவது ஏன்?- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
  • BREAKING-NEWS வேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட உள்தமிழகத்தின் ஒருசில இடங்களில் அனல் காற்று வீசும்- சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்
  • BREAKING-NEWS 10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து
  • BREAKING-NEWS காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது

“பிரதமர் நேர்மையாக இருந்தால், யாரும் இந்தியாவை ஏமாற்ற முடியாது” - அருண் ஜெட்லி

if-the-prime-minister-is-honest-no-person-who-cheats-india-will-escape-arun-jaitley

பிரதமர் நேர்மையாக இருந்தால், யாரும் இந்தியாவை ஏமாற்றிவிட்டு தப்பிக்க முடியாது என மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

மத்திய இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. நிதியமைச்சராக இருந்த அருண் ஜெட்லி உடல்நலக் குறைவால் சிகிச்சைக்காக வெளிநாடு சென்றுள்ளார். இதனால் அவருக்கு பதிலாக தற்காலிக நிதியமைச்சராக பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். இன்றைய இடைக்கால பட்ஜெட்டை அவரே தாக்கல் செய்து வருகிறார்.

இன்று பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ள நேற்று அருண் ஜெட்லி சில கருத்துக்களை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், பிரதமர் நேர்மையாகவும், நேர்மையான பண்புடனும் அரசாங்கத்தை நடத்தினாலும் இந்தியாவை ஏமாற்றிவிட்டு யாரும் தப்பிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் எலும்புகள் ஒருநாள் தோண்டி எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். ஏன் அனைவரும் ராணுவ ஒப்பந்தங்களை தெரிந்துகொள்ள வேண்டும் ? என கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன், இந்தியாவை யாரும் ஏமாற்றிவிட்டு தப்பிக்கவோ, உலகில் எங்கும் மறைந்துகொள்ளவோ முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார். அப்படிப்பட்டவர்களை விட இந்தியா அரசு வலிமையுடனும், வளர்ச்சியடைந்த சர்வதேச நடைமுறைகளையும் கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close