[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

வேலையில்லாதோருக்கு உதவித்தொகை அறிவிப்பு - ராஜஸ்தான் அரசு அதிரடி

unemployment-allowance-in-rajasthan-from-march-1

வேலையில்லாத ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கூடுதலாக உதவித்தொகையை வழங்கப்படும் என ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.

ராஜஸ்தானில் கடந்த 15 ஆண்டுகளாக நடைபெற்று வந்த பாஜக ஆட்சி, கடந்த 5 மாநில தேர்தலுடன் முடிவிற்கு வந்தது. தற்போது அங்கு காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதலமைச்சராக பதவியேற்ற அசோக் கெலாட் ஏற்கனவே விவசாயக் கடன்களை அங்கு தள்ளுபடி செய்துள்ளார். 

அத்துடன் பாஜக ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட அரசு திட்டங்களை தற்போதைய காங்கிரஸ் அரசு அங்கு மேம்படுத்தி வருகிறது. உதாரணமாக, பாஜக ஆட்சிகாலத்தில் கொண்டுவரப்பட்ட பசு பதுகாப்புத்துறையை ஊக்குவிக்கும் வகையில், சாலைகளில் சுற்றித்திரியும் பசுக்களை பராமரிப்பவர்களுக்கு அரசு கெளரவம் அளிக்கப்படும் என ராஜஸ்தான் அரசு அண்மையில் அறிவித்தது. 

           

இதற்கிடையே மக்களவை தேர்தல் வருவதையொட்டி, நாட்டின் ஏழை மக்களுக்கு குறைந்தபட்ச வருமான திட்டம் என்பதை தாங்கள் ஆட்சிக்கு வந்தால் கொண்டு வருவோம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் அறிவித்தார். ஆனால் இந்த திட்டத்தில் நடைமுறை சிக்கல்கள் வரும் என்ற விமர்சனங்களை பாஜகவினர் முன்வைத்தனர். 

இந்நிலையில், வேலையில்லாத ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கூடுதலான உதவித்தொகையை அம்மாநில முதலமைச்சர் அறிவித்துள்ளார். இந்த திட்டம் ஏற்கனவே ராஜஸ்தானில் நடைமுறையில் உள்ளது. ஆனால் இதற்கு முன்னர் ஒருநபருக்கு ரூ.600 மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இதனை மேம்படுத்தி வரும் மார்ச் 1ஆம் தேதி முதல் வேலையில்லாத பெண்களுக்கு ரூ.3,500 மற்றும் ஆண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

          

ஏற்கனவே உள்ள திட்டம் மேம்படுத்தப்பட்டுள்ளது என்ற கோணத்தை தவிர்த்து, மற்ற இரண்டு கோணங்களிலும் இந்த அறிவிப்பை பார்க்கலாம். ராகுல் காந்தி அறிவித்து குறைந்தபட்ச வருமானத் திட்டம் சாத்தியமா ? என்று கேள்வி எழும்பியுள்ள நிலையில், அதற்கு முன்னோட்டமாக இந்த அறிவிப்பை பார்க்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். 

அத்துடன் இந்த ஆண்டிற்கான மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் நாளை வெளியாகவுள்ளது. அதில் பாஜக அதிரடி அறிவிப்புகளை வெளியிடலாம் எனப்படுகிறது. அதற்கு முன்னதாகவே, குறைந்தபட்ச ஊதியத் திட்டம் என்பதை வெளிப்படுத்தும் ஒரு முன் அறிவிப்பாகவும் இதனை பார்க்கலாம் எனக் கூறப்படுகிறது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close