[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு
  • BREAKING-NEWS கர்நாடக சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS ”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS எம்.எல்.ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடிய எடியூரப்பா - வைரலாகும் புகைப்படம்

10% இட ஒதுக்கீடு சட்டம் வரலாற்றில் இடம் பெறும் - ராம்நாத் கோவிந்த்

president-ramnath-kovind-speech-at-parliament

பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் வரலாற்றில் இடம்பெறும் என்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

16-ஆவது மக்களவையின் கடைசி கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடரை தொடங்கி வைத்து நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அப்போது காந்தியடி‌களின் 150-ஆவது ஆண்டு என்பதால் 2019-ஆம் ஆண்டு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறிய ராம்நாத்கோவிந்த், சமான்ய மக்களின் வாழ்வு மாற வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்றார். ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவதில் அ‌ரசு உறுதி பூண்டுள்ளதாகவும் கூறினார்.

பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் வரலாற்றில் இடம்பெறும் என்றும் குறிப்பிட்டார். மருத்துவ காப்பீடு திட்டம் மூலம் இதுவரை 21 கோடி பேர் பயனடைந்துள்ளனர் என்று கூறிய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் மக்களின் ஆரோக்கியம் காப்பதுதான் அரசின் முன்னுரிமை என்றும், மருத்துவ செலவுதான் மக்களின் பெரும் கவலையாக இருப்பதாகவும் தெரிவித்‌தார். நாட்டின் நான்கு திசைகளிலும் மருத்துவ சேவை கிடைக்கும் வகையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுவதாகவும் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close