[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது
  • BREAKING-NEWS பால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

குடியரசு தின உரையை இடையில் நிறுத்தி கலெக்டரை படிக்க சொன்ன அமைச்சர் !

madhya-pradesh-minister-struggles-to-read-speech-at-republic-day-event-asks-collector-to-finish-it

மத்தியப் பிரதேசத்தில் குடியரசு தின விழாவில் தனது உரையை இடையில் நிறுத்திவிட்டு, கலெக்டரை படிக்க சொன்ன அமைச்சர் இமர்தி தேவி சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இன்று நாடு முழுவதும் 70வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. குடியரசுத் தினத்தில் தலைநகர் டெல்லியில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். முப்படை வீரர்களின் அணிவகுப்புடன் ராஜபாதையில் அனைத்து மாநில அலங்கார வாகன ஊர்வலம் மற்றும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

இந்நிலையில், மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் நடைபெற்ற விழாவில் கொடியேற்றிய அமைச்சர் இமர்தி தேவி, குடியரசு தின உரையை ஆற்றினார். அப்போது உரையை முழுமையாக வாசிக்க முடியாமல் திக்கி திணறினார். ஒருகட்டத்தில், அதனை மாவட்ட ஆட்சியர் வாசிப்பார் என்று கூறி அவர் விலகிவிட்டார். பின்னர் அந்த உரையை மாவட்ட ஆட்சியர் பாரத் யாதவ் வாசித்து முடித்தார். இதனால் உரையை முழுமையாக வாசிக்க கூட முடியாதா என சமூக வலைதளவாசிகளால் சர்ச்சையில் சிக்கியுள்ளார் அமைச்சர் இமர்தி தேவி. 

இதுகுறித்து ஏ.என்.ஐக்கு பேட்டியளித்த அமைச்சர் இமர்தி தேவி, தனக்கு கடந்த இரண்டு நாட்களாக உடல்நிலை சரியில்லை எனவும் அதனால் தான் என்னால் உரையை வாசிக்க முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close