[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க இன்று மாலை ஒப்பந்தம் கையெழுத்தாகிறது டெல்லி தனியார் ஓட்டலில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு அனுமதி வழங்குகிறார் அமைச்சர் தர்மேந்திர பிரதான்
  • BREAKING-NEWS தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு
  • BREAKING-NEWS அறிமுகமானது முறைப்படுத்தப்பட்ட வாடகைத் தாய் மசோதா
  • BREAKING-NEWS தனியார் மருத்துவமனைக்கு ராஜகோபாலை மாற்ற நீதிமன்றம் அனுமதி

தகாத உறவுக்கு மறுத்ததால் கொடூரம்: மும்பை மாடல் கொலையில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

mansi-dixit-murder-case-19-year-old-killed-model-for-saying-no-to-sex

மும்பை மாடல் கொல்லப்பட்ட வழக்கில் போலீசார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகை யில் பகீர் தகவல்கள் வெளியாகி யுள்ளன. 

ராஜஸ்தான் மாநிலம் கோடாவை சேர்ந்தவர் மான்சி தீக்‌ஷித். வயது 20. மாடல் ஆகும் ஆசையில் இருந்தவர். இவருக்கு மும் பையில் படித்துக்கொண்டிருந்த சையத் முஸாமில் (19) என்பவர் தொடர்பு, பேஸ்புக் மூலம் கிடைத்தது. சையத், ஐதராபாத் தில் இருந்து மும்பை வந்தவர். இருவரும் பழகி வந்துள்ளனர். அப்போது தன்னை பிரபல புகைப்படக் கலைஞர் என்றும் தன்னிடம் புகைப்படம் எடுத்த பலர் இப்போது மாடலிங்கில் ஜொலிப்பதாகவும் கூறியுள்ளார். இதை நம்பியிருக்கிறார் மான்சி.

மும்பை அந்தேரியில் உள்ள தனது வீட்டுக்கு மான்சியை அழைத்துள்ளார் சையத். வந்தார் மான்சி. அப்போது புகைப்படம் எடுப்பது பற்றி இருவரும் பேசியுள்ளனர். பின்னர் உடைகளை மாற்றி வருமாறு கூறியுள்ளார் சையத். உள் அறைக்குச் சென்று உடை மாற்றினார் மான்சி. அப்போது மறைவாக வைத்திருந்த கேமரா மூலம் அதை ரகசியமாக படம் பிடித்துள்ளார் சையத். பின்னர் போட்டோ ஷூட் போல ஏமாற்றியுள்ளார். ஒரு கட்டத்தில் மான்சிக்கு இது பொய் வேலை என்பது தெரியவந்தது. அப்போது சையத் தான் புகைப்படக் கலைஞர் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இதனால் கோபமான மான்சி, தன்னை ஏமாற்றிவிட்டதாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். உன்னை போலீசில் புகார் செய்வேன் என்று கூறியுள்ளார். அப்போது, ’நீ உடை மாற்றும் புகைப்படங்கள் என்னிடம் இருக்கிறது. இதை ஆன்லைனில் பரப்பிவிடுவேன். என்னுடன் உல்லாசமாக இரு’ என்று மிரட்டியுள்ளார் சையத். மறுத்த மான்சி, அவருடன் சண்டை போட்டு விட்டு வெளியேற முயன்றுள்ளார். அப்போது மான்சியை பிடித்து இழுத்து கயிறால் கழுத்தை இறுக்கிக் கொன்றார். பின்னர் சூட்கேஸுக்கு அவர் உடலை அடக்கி, ஓலா காரை வாடகைக்கு அமர்த்தி மலாடு அருகே வீசிச்சென்றுள்ளார்.

அந்த ஓலா டிரைவர், அடுத்த சில நிமிடங்களிலே அதே இடத்துக்குத் திரும்பி வந்து பார்த்தார். சையத் கொண்டு வந்த சூட் கேஸ் ஓரத்தில் கிடப்பதைக் கண்டு சந்தேகம் அடைந்தார். உடனடியாக போலீசுக்கு தகவல் சொன்னார். அவர்கள் விரைந்து வந்து திறந்து பார்த்தனர். உள்ளே இளம் பெண்ணின் உடல் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து அந்த உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, அங்குள்ள சிசிடிவி கேமராவை பரிசோதித்தனர். அப்போது சையத், சூட்கேஸை போட்டுவிட்டு ஆட்டோவில் தப்பிச் செல்லும் காட்சிப்பதிவுகள் கிடைத்தன. விரைந்து செயல் பட்ட போலீசார், அந்த ஆட்டோவை விரட்டிச் சென்று சையத்தை அமுக்கினர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் ஒவ்வொரு முறையில் ஒவ்வொரு தகவலை சொல்வதாக போலீசார் தெரிவித்திருந்தனர். இந்த வழக்கில் போலீசார் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில் சையத்தின் வாக்குமூலம் இடம்பெற்றுள்ளது. 

’’நான் மான்சியை அனுபவிக்கும் நோக்குடன் வீட்டுக்கு வரவழைத்தான். வந்ததுமே என் நோக்கம் அவருக்கு புரிந்துவிட் டதால், தகராறில் ஈடுபட்டார். மர ஸ்டூலால் தாக்கினேன். மயங்கி விழுந்தார். பின்னர் அவருடன் தகாத உறவில் ஈடுபட முயன்றேன். அவர் சுதாரித்து தடுத்தார். பின்னர் கயிறால் கழுத்தை இறுக்கிக் கொன்று, உடலை சூட்கேஸுக்குள் அடைத்து வாடகை கார் புக் செய்தேன். முதலில் வந்த வாடகை கார் டிரைவர், சூட்கேஸ் ஏன், இவ்வளவு கனமாக இருக்கிறது என்று கேட்டார். இதனால் அவர் காரை வேண்டாம் என்று கூறினேன். பின்னர் மற்றொரு காரை வரவழைத்து, மலாடு அருகே வீசிவிட்டு, ஒரு ஆட்டோவில் திரும்பினேன். பிறகு போலீசார் என்னை கைது செய்துவிட்டனர்’’ என்று தெரிவித்துள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close