[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் தேசிய ஜனநாயக கட்சி நாடாளுமன்ற குழு கூட்டத்தில் அனைவரும் சேர்ந்து நரேந்திர மோடியை தலைவராக தேர்வு செய்ய உள்ளனர்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் எம்.பி.க்கள் நாளை சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்கின்றனர்
  • BREAKING-NEWS நீங்கள் வெற்றிபெற்ற மாநிலங்களை விட தமிழகத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்- மோடிக்கு கமல்ஹாசன் கோரிக்கை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.24 காசுகளாகவும் விலை நிர்ணயம்

குடும்பத்தைக் காப்பாற்ற ஆணாக மாறி சலூன் நடத்தும் சகோதரிகள்!

teenage-sisters-become-deepak-raju-to-keep-father-s-barbershop

குடும்பத்தை காப்பாற்ற ஆண் வேடத்தில் சலூன் கடையை நடத்திய சகோதரிகள் பற்றிய தகவல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம், குஷிநகர் மாவட்டத்தில் இருக்கிறது பன்வாரி டோலா கிராமம். இங்குள்ள முடிவெட்டும் கடையில் வேலை செய்கிறார் கள் தீபக்கும் (17), ராஜூவும் (15). விதவிதமாக, ஸ்டைலாக முடி வெட்டும் இவர்கள், பெண்கள் என்பது ஒரு கட்டத்தில் தெரிய வர, வாடிக்கையா ளர்களுக்கு ஆச்சரியம். ‘’அட, ஆம்பளை மாதிரி டிரெஸ் பண்ணி, இவ்வளவு நாளும் முடிவெட்டியது பெண்களா?’’ என்று அதிர்ச்சி அடைந்தனர். இதைக் கேள்விபட்ட சிலர் அந்தப் பெண்களை, திட்டினர். சிலர் தவறாக நடக்க முயன்றனர். இப்போது விஷயம் வெளியே தெரிந்து விட்டதால், பெண்களாகவே வந்து முடிவெட்டும் தொழிலை செய்து வருகிறார்கள்.

‘’அப்பா துருவ் நாராயணன் தான் கடையை பார்த்துட்டு இருந்தார். 2014-ல் அவருக்கு வலிப்பு நோய் வந்து படுத்த படுக்கையாகிட்டார். இதனால கடையை அடைச்சிருந்தோம். வருமானத் துக்கு வழியில்லை. பிறகு நாங்களே கடையை நடத்த ஆரம்பிச்சோம். பெண்கள் சலூன் கடையை நடத்தினா, தேவையில்லாம எல்லாரும் எங்களையே கவனிப்பாங்கன்னு, நாங்க ஆண்கள் போல உடை உடுத்திக்கிட்டோம். எங்க ஹேர்ஸ்டை லையும் ஆண்கள் போல மாத்தினோம். கையில காப்பு போட்டுக்கிட்டோம். எங்க கிராமத்துல உள்ளவங்களுக்கு உண்மை தெரியும். ஆனா, பக்க த்து ஊர்ல இருந்து வர்றவங்களுக்கு தெரியாது.

ஒரு கட்டத்துக்கு மேல எங்க அடையாளத்தை மறைக்க முடியாதுன்னு தெரிஞ்சுதான் இருந்தது. அதே போல நாங்கள் வளர வளர தெரிய வந்துடுச்சு. பெண்கள்னு தெரிஞ்ச பிறகு பலர் கடுமையா விமர்சிச்சாங்க. இந்த மாதிரி நடிச்சு, இந்த தொழிலை பண்றதுக்கு செத்து போயிரலாம்னு கூட சொன்னாங்க’’என்கிறார் தீபக் ஆக மாறியிருந்த ஜோதி.

பிளஸ் டூ வரை படித்திருக்கிற ஜோதியும் பத்தாவது வரை படித்திருக்கிற ராஜூவான நேகாவும் ஆரம்பத்தில், காலையில் பள்ளிக்கு சென்றுவிட்டு மாலையில் கடையை திறந்திருக்கிறார்கள். பிறகு படிப்பை நிறுத்திவிட்டு முழுநேரமாக கடையை திறந்து வேலை செய்திருக்கிறார்கள்.

இதைக் கேள்விபட்ட உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர், இந்தி நாளிதழ் ஒன்று எழுத, மாநில அரசு இவர்களின் தன்னம்பிக்கையை பாராட்டி கவுரவித்திருக்கிறது. தினமும் ரூ.400 முதல் ரூ.500 வரை சம்பாதிக்கும் இவர்கள், ‘’இப்போ எங்களுக்கு பயமில்லை. தைரியம் வந்துடுச்சுங்கற தால நாங்கள், நாங்களா கடையில வேலை செய்கிறோம்’’ என்கிறார்கள்.

‘’ஆரம்பத்துல என் மகள்களை நினைச்சு கவலையா இருந்துச்சு. அவங்க கடையை நடத்தியது ரொம்ப காயத்தை தந்தது. இப்ப, என் மகள்களை நினைச்சு ஒரு தந்தையா பெருமையா இருக்கு’’ இவர்களின் தந்தை துருவ் நாராயணன்.

இந்த சகோதரிகளுக்கு கனவு ஒன்றும் இருக்கிறது. அது, சூப்பரான ஒரு பியூட்டி பார்லரை எதிர்காலத்தில் தொடங்க வேண்டும் என்பதுதான் என்கிறார்கள்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close