[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு
  • BREAKING-NEWS ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு
  • BREAKING-NEWS அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு

குருகிராமில் தங்கியுள்ள பாஜக எம்.எல்.ஏக்களை திரும்ப அழைத்தார் எடியூரப்பா!

bs-yeddyurappa-calls-back-all-bjp-mlas-who-were-staying-in-gurugram

ஹரியானா மாநிலம் குருகிராமில் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள பாஜக எம்.எல்.ஏக்களை, கர்நாடக மாநில பாஜக தலைவர் எடியூரப்பா திரும்ப அழைத்துள்ளார்.

கர்நாடகாவில், மதசார்பற்ற ஜனதா தளம்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பாரதிய ஜனதா சதித் திட்டம் தீட்டி எம்.எல்.ஏக்களிடம் குதிரை பேரம் பேசி வருவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இதையடுத்து காங்கிரஸ் கட்சியினர் ஒற்றுமையுடன் இருப்பதை நிரூபிக்க பெங்களூருவில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 76 பேர் பங்கேற்றனர். 3 பேர் புறக்கணித்தனர்.

(காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்)

அவர்களைத் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை எனக் கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து எம்.எல்.ஏக்கள் அனைவரும் பெங்க ளூருவில் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

ஏழு மாதத்திற்கு முன் சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்தவுடன் தொங்கு சட்டப்பேரவை உருவானதால் எம்.எல்.ஏக்களிடம் குதிரை பேரம் நடைபெற்றதாகர் புகார் எழுந்தது. அப்போதும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் விலை போகாமல் பாதுகாத்துக்கொள்ள அங்குதான் தங்க வைக்கப் பட்டனர். 

இதேபோல் சில நாட்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியினரிடம் முன்னெச்சரிக்கையாக இருப்பதற்காக பாரதிய ஜனதாவும் அக்கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்களை ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைத்தனர். இதனால் கர்நாடக அரசியலில் பரபரப்பு நில வுகிறது. இந்நிலையில் குர்கானில் தங்கியுள்ள பாஜக எம்.எல்.ஏக்களை அம்மாநில பாஜக தலைவர் எடியூரப்பா திரும்ப அழைத்துள்ளார். 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close