[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலையொட்டி சென்னையில் 113 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு
  • BREAKING-NEWS விவசாயிகளுக்கு பட்ஜெட்டில் அறிவித்தபடி ரூ.6ஆயிரம் 3 தவணையாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது
  • BREAKING-NEWS ஏழை தொழிலாளர்களின் வங்கி கணக்கில் ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா பிறந்தநாளான வரும் 24ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS திமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிப்பங்கீடு பற்றி அண்ணா அறிவாலயத்தில் நாளை அறிவிக்கப்படும் - டெல்லியில் கே.எஸ்.அழகிரி பேட்டி
  • BREAKING-NEWS 21 தொகுதி இடைத்தேர்தல்களிலும் அதிமுகவுக்கு பாஜக முழு ஆதரவு அளிப்பதாக தீர்மானம் - பியூஷ் கோயல், துணைமுதல்வர் ஓபிஎஸ் கூட்டாக பேட்டி
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி உறுதியானது; அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கான திமுக-காங்கிரஸ் கூட்டணி நாளை அறிவிக்கப்படும் என காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தகவல்

சபரிமலையில் இதுவரை 51 பெண்கள் தரிசனம் - கேரள அரசு அறிக்கை

51-women-entered-into-sabarimala-kerala-govt

சபரிமலையில் இதுவரை 51 பெண்கள் தரிசனம் செய்திருப்பதாக கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என கடந்த சில மாதங்களுக்கு முன் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. இது சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் மன உணர்வை புண்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி போராட்டங்கள் நடந்தன. சபரிமலைக்கு செல்ல முயன்ற பெண் பக்தர்கள், சக ஆண் பக்தர்களாலும், போராட்டக்காரர்களாலும் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் சபரிமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் போலீசார் பாதுகாப்பை வலுப்படுத்தினர்.

இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன் கனகதுர்கா மற்றும் பிந்து ஆகிய இரு பெண்கள் சபரிமலையில் முதல்முறையாக தரிசனம் செய்தனர். இவர்கள் 50 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் என்பதால் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேசமயம் பாதுகாப்பு கருதி போலீசார், இவர்களை வீட்டுக்கு அனுப்பாமல் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன் இருவரும் அவரவர்கள் வீட்டிற்கு சென்றனர். அப்போது சபரிமலை சென்றது தொடர்பாக கனகதுர்காவுக்கும், அவர் மாமியாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கனகதுர்காவை அவரது மாமியார் சுமதியம்மா சரமாரியாக தாக்கியதாக புகார் எழுந்தது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மாமியார் மீது போலீஸில் புகார் செய்தார். இதனையடுத்து கனகதுர்காவும் பிந்துவும் தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் 24 மணி நேர பாதுகாப்பு வேண்டும் என்றும் கூறி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சபரிமலையில் 10 வயதிலிருந்து 50 வயதிற்குட்பட்ட 51 பெண்கள் இதுவரை சபரிமலையில் தரிசனம் செய்துள்ளதாக கேளர அரசு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தது. அதேசமயம் கனகதுர்கா மற்றும் பிந்துவிற்கு போதிய பாதுகாப்பு வழங்க கேரள போலீசாருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close