[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சோளத்தை வரியின்றி இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும்- பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் வரும் 18ம் தேதி காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS முன்னாள் அமைச்சர் கல்ராஜ் மிஷ்ரா ஹிமாச்சல பிரதேசத்தின் புதிய ஆளுநராக நியமனம் . ஹிமாச்சல் ஆளுநராக இருந்த ஆச்சார்யா தேவ்ரட் குஜராத் ஆளுநராக பணியிடமாற்றம்
  • BREAKING-NEWS ‘பெருங்களத்தூர் டூ சிங்கப்பெருமாள் கோவில்- 8 வழிச்சாலை’ : முதல்வர் அறிவிப்பு
  • BREAKING-NEWS தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏவுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது

மத்திய இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு யுனிவர்செல் வருவாய் திட்டம்?

universal-income-scheme-may-get-budget-nod

இன்னும் சில வாரங்களில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அதில் விவசாயிகளுக்காக யுனிவர்செல் வருவாய் திட்டம் முக்கியமானதாக இடம்பெறும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய மதிப்பு அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் சமீபத்தில் விவசாயிகள் நடத்திய போராட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்நிலையில் விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீர்வுகாணும் வகையில் வரும் இடைக்கால பட்ஜெட் தொடரில் யுனிவர்செல் வருவாய் திட்டம் குறித்த அறிவிப்பு இடம்பெறலாம் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தெலங்கானவில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் டிஆர்எஸ் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. இக்கட்சி வெற்றி பெற்றதற்கான காரணங்களில் ஒன்று ராயத் பந்த் திட்டம். தெலங்கானாவில் அமல்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தின்படி 1 ஏக்கர் நிலத்திற்கு ஒரு பருவத்திற்கு விவசாயிகளுக்கு ரூ.4000 வழங்கப்படுகிறது. விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி, விவசாய பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்வது போன்றவை போலல்லாமல் நிலம் உள்ள விவசாயிகளுக்கு குறிப்பிட்ட தொகை வருமானம் கிடைப்பதை இந்தத் திட்டம் உறுதி செய்கிறது. அதேசமயம் நிலத்தை குத்தகை எடுத்து விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு இந்த ராயத் பந்த் திட்டத்தின்படி வருமானம் வழங்கப்படமாட்டாது.

இந்நிலையில் யுனிவர்செல் வருவாய் திட்டமும் தெலங்கானாவில் அமல்படுத்தப்பட்டுள்ள ராயத் பந்த் திட்டம் போன்றே இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர். இதனிடையே இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டால் இதில் ஒருசில சிக்கல்களும் வரலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர். அதாவது நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் பணம், நிலத்தில் வேலை செய்யும் விவசாயிகளிடம் சென்றடையுமா.? என்பது கேள்விக்குறியாக உள்ளது. அதேபோல நாடு முழுவதும் இந்தத் திட்டத்தை அமல்படுத்தும்போதும் இதில் சிக்கல்கள் எழலாம் எனவும், ஊழல் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் நிபுணர்கள் கருதுகின்றனர்.

வடமாநிலங்களில் பொதுவாகவே நிலம் வைத்திருப்பவர்கள் தங்கள் நிலத்தில் இறங்கி உழுது வேலை செய்வதில்லை. அவர்கள் வேலையாட்களை வைத்துள்ளனர். அல்லது குத்தகைக்கு நிலத்தை விடுகின்றனர். ஒருவேளை இதேபோன்ற திட்டம் அமல்படுத்தப்பட்டால், நில உரிமையாளர்கள் வேலைசெய்யும் விவசாயிகளுக்கு உரிய பணத்தை கொடுப்பார்களா..? என்பது கேள்விக்குறித்தான் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

பொதுவாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள ஆண்டுகளின் தொடக்கத்தில் இடைக்கால பட்ஜெட் தான் தாக்கல் செய்யப்படும். இடைக்கால பட்ஜெட்டில் பெரிய பெரிய அறிவிப்புகள் இருக்காது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்குத் தான் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ஆனால் தேர்தலை கருத்தில் கொண்டு பெரிய திட்டங்களை அறிவிக்க பாஜக முயற்சி செய்கிறதா..? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏற்கெனவே வரும் பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு உச்சவரம்பை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படும் நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவாக பெரிய திட்டம் அறிவிக்கப்படலாம் என்ற பேச்சும் நிலவுவது தேர்தலை முன்வைத்தே என்ற கருத்து நிலவுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close