[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு
  • BREAKING-NEWS கர்நாடக சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS ”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS எம்.எல்.ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடிய எடியூரப்பா - வைரலாகும் புகைப்படம்

நடன பார்களுக்கான கட்டுப்பாடுகளை‌ தளர்த்தியது உச்சநீதிமன்றம்..!

supreme-court-paves-way-for-opening-dancing-bars-in-mumbai

மும்பையில் இயங்கும் நடன பார்களுக்கான கட்டுப்பாடுகளை‌ தளர்த்தி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக அரசு ஆட்சி அமைத்த பிறகு அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்தார். அதன்படி நடன பார்கள் மகாராஷ்டிர மாநில கலாச்சாரத்துக்கு எதிரானது என கூறி பல விதிமுறைகளை வகுத்தார். நடன பார்களால் இளைஞர்கள் தவறான வழிக்குச் செல்ல வாய்ப்பிருக்கிறது என்று கருதிய அம்மாநில அரசு சில நிபந்தனைகளை விதித்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

Image result for supreme court of india

உச்சநீதிமன்றத்தில் அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சிக்ரி, அசோக் பூஷண் அமர்வு, மும்பையில் நடன பார்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தப்படுவதாக அறிவித்தனர். அந்த வகையில் நடன பார்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என்ற மகாராஷ்டிர மாநில அரசின் உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 

Image result for mumbai bar dance

மேலும் பெண்கள் நடனமாடும் மேடையும், மது அருந்தும் இடமும் அருகருகே இருக்கக் கூடாது என்ற தடையையும் உச்சநீதின்றம் நீக்கியுள்ளது. இதனைதொடர்ந்து கல்வி நிலையம் மற்றும் வழிபாட்டு தலங்களிலிருந்து குறைந்தது ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு வெளியே நடன பார்கள் இருக்க வேண்டும் என்ற விதிமுறையும் நீக்கப்பட்டுள்ளது. அதே வேளையின் நடன பார்களை மாலை ஆறு மணி முதல் நள்ளிரவு 11.30 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. பார்களில் நடனமாடும் பெண்களின் மீது பணத்தை இறைக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close