[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS புல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

5 லட்சமாக உயர்த்தப்படுமா வருமானவரி விலக்கு?

will-the-income-tax-limit-be-raised-to-5-lakhs

 

மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமானவரி விலக்கு வரம்பை 5 லட்சம் ரூபாயாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல், மே மாதங்களில் பல்வேறு கட்டங்களாக நடைபெற இருக்கிறது.  இந்தத் தேர்தலுக்கு முன் பாரதிய ஜனதா தலைமையிலான அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. இதற்காக நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற ஜனவரி 31ந்தேதி முதல் பிப்ரவரி 13ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் பிப்ரவரி 1ல் மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

மத்திய பட்ஜெட்டில் ‌நடுத்தர மக்கள் மிகவும் எதிர்பார்ப்பது வருமா‌ன வரி குறித்த அறிவிப்புகளையே‌. தற்போது தனி நபரின் ஆண்டு ‌வருவாய் இரண்டரை லட்சம் ரூபாய்க்கு மேல் ‌இருந்தால் வருமா‌ன வரி கட்ட வேண்டியுள்ளது. ‌‌கடைசியாக வருமான வரி விலக்கு வரம்பு 2014ம் ஆண்டு பட்ஜெட்டில் உயர்த்தப்பட்டது. அதற்குப் பின் ‌இரண்டரை லட்சம் ரூபாய் என்ற நிலையே தொடர்கிறது. இந்நிலையில், வரு‌மான வரி வில‌க்கு வரம்பை 5 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. 

மேலும், தற்போது ஒன்றரை லட்சம் ரூபாய் வரையிலான சேமிப்புகளுக்கு 80 சி பிரிவில் விலக்கு அளிக்கப்பட்டு வரும் நிலையில், இவ்வரம்பை இரண்டரை லட்சம் ரூபாயாக அதிகரிக்க வேண்டும் என்றும் ‌கோரி‌க்கைகள் உள்ளன. இந்நிலையில், வரும் பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு வரம்பு 5 லட்ச ரூபாயாக அதிகரி‌க்க‌ப்பட வாய்ப்புள்ளதாக மத்திய நிதியமைச்சக ‌வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.‌‌ இந்த வரம்பு‌ உயர்த்த‌ப்பட்டால் நடுத்தர பிரிவைச் சேர்ந்த பல கோடி மக்கள் பலன் பெ‌று‌‌வா‌ர்கள்‌. 

அதேநேரம், இதனால் அரசி‌ன் நிதி நிலைமை பாதிக்கப்படும் அபாயமும் இருக்கிறது‌. ஏற்கனவே பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளதாலும் சிறு தொழில் ‌நிறுவனங்களுக்கான ஜிஎஸ்டி ‌விலக்கு வரம்பு அதிகரிப்பாலும் கணிசமான வருவாய் இழப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. 

மேலும்‌, வருமான வரி விலக்கு வரம்பை அதிகரிப்பதன் மூலம் பெரும்பாலான மக்களை வருமான வரி வலைக்குள்‌ கொண்டு வரும் இலக்கும் பாதிக்கப்படும். எனினும், பொதுத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நடுத்தர மக்களை திருப்தி‌ப்படுத்த வேண்டிய நிலையிலும் மத்திய அரசு ‌உள்ளது. இ‌ந்தச் சூழலில் அ‌ரசின் முடிவு எ‌ன்னவாக இருக்கும் என்பது வரும் 1ம் தேதி தெரிந்துவிடும்.


 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close