[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு
  • BREAKING-NEWS சென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS கர்நாடகா மாநிலத்தின் காங்கிரஸ் எம்எல்ஏக்களை கடத்தியதால்தான் பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு பன்றிக்காய்ச்சல் வந்தது - பி.கே.ஹரிபிரசாத்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.23 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு
  • BREAKING-NEWS வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்

பாஜக மணமக்கள் அச்சடித்த ‘ரஃபேல்’ திருமண அழைப்பிதழ்!

gujarat-couple-seeks-gift-of-bjp-vote-backs-rafale-deal-in-wedding-card

ரஃபேல் விவகாரம் நேர்மையாக நடந்ததாக விளக்கம் அளித்து பாஜக ஆதரவாளர்கள் அச்சடித்த திருமண அழைப்பிதழ் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தங்களது திருமண அழைப்பிதழ்களில் வித்தியாசம் காட்ட இன்றைய கால இளைஞர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். வாட்ஸ்அப், பேஸ்புக், சாக்லெட் இன்னும் பல வித்தியாசமான வடிவங்களில் திருமண அழைப்பிதழ்கள் அச்சாகின்றன. இதேபோல் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மணமக்கள் தங்களுக்கு பிடித்த கட்சியான பாஜகவை முன்னிலைப்படுத்தி திருமண அழைப்பிதழை அச்சடித்துள்ளனர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த மணமக்கள் யுவராஜ் மற்றும் ஷாக்‌ஷி. இருவரும் பாஜகவின் ஆதரவாளர்கள். இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளவுள்ள நிலையில் தங்களது திருமண அழைப்பிதழை பாஜகவின் விளம்பரமாகவே மாற்றியுள்ளனர். 

பத்திரிகையில் ஒரு பக்கம் முழுவதும் ரஃபேல் விமான ஒப்பந்தம் நேர்மையாக நடந்தது என விளக்கம் அளித்துள்ளனர்.  “அமைதியாக இருங்கள். மற்றும் நரேந்திரமோடியை நம்புங்கள்’’ என்ற தலைப்புடன் 9 தகவல்களை அவர்கள் பகிர்ந்துள்ளனர். அதில் ஒரு சாதாரண விமானத்தின் விலையையும், ஒரு பாதுகாப்பு விமானத்தின் விலையையும் ஒரு முட்டாள் கூட ஒப்பிட்டு பார்க்க மாட்டான் என்று குறிப்பிட்டுள்ளனர். 

மேலும் விமான ஒப்பந்தத்தில் ரகசிய காப்பு ஒப்பந்தம் இல்லை என்று பிரான்ஸ் அதிபர் தன்னிடம் கூறியதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சொன்னதை குறிப்பிட்டுள்ளனர். அதே போல் பின்னர் ராகுல்காந்தியின் குற்றச்சாட்டை பிரான்ஸ் மறுத்ததையும் தெரிவித்துள்ளனர்.

மேலும்,“நமோ செயலி மூலம் பாஜகவுடன் இணைந்திருப்பதும், வரும் மக்களவைத் தேர்தலில் மோடிக்கு வாக்களிப்பதுமே எங்கள் திருமணத்துக்கு நீங்கள் தரும் அன்பளிப்பு” என்றும் அவர்கள் அந்த அழைப்பிழதழில் குறிப்பிட்டுள்ளனர். பாஜக தொண்டர்களின் இந்த வித்தியாசமான திருமண அழைப்பிதழ் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close