[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

கூட்டணியை அறிவிக்கும் முன் அகிலேஷ் யாதவ் எங்களிடம் பேசவில்லை - ராகுல்காந்தி

akhilesh-yadav-did-not-speak-with-us-before-announcing-sp-bsp-alliance-says-rahul-gandhi

சமாஜ்வாதி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ்வாதி கட்சி கூட்டணி குறித்து அறிவிக்கும் முன் அகிலேஷ் யாதவ் தங்களிடம் பேசவில்லை என காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதியும், மாயாவதியின் பகுஜன் சமாஜும் அம்மாநிலத்தில் உள்ள 80 தொகுதிகளில் தலா 38 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்திருந்தது. காங்கிரஸ் கட்சியின் செல்வாக்குள்ள ராகுல், சோனியாவின் அமேதி, ரபேலி தொகுதிகளில் போட்டியில்லை என்று அறிவித்தனர். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்பதை மாயாவதி தெளிவுப்படுத்தினார். மாயாவதி சொல்லியதை அகிலேஷ் வழிமொழிந்தார்.

இதையடுத்து உத்தரப் பிரதேசத்தில் போட்டியிடுவது தொடர்பாக காங்கிரஸின் உயர்மட்டக் குழுக் கூட்டம் லக்னோவில் கூடியது. கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ்பாபர் உள்ளிட்ட நிர்வாகிகள் கூட்‌‌டத்தில் பங்கேற்றனர். அதில் வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 80 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் என குலாம்நபி ஆசாத் அறிவித்தார். 

பாரதிய ஜனதாவுக்கும் காங்கிரசுக்கும் தேர்தல் போர் நிலவிவரும் நிலையில் கூட்டணிக்கு எந்தக் கட்சி வந்தாலும், ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பதாகவும் குலாம் நபி ஆசாத் கூறினார்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, சமாஜ்வாதி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ்வாதி கட்சி கூட்டணி குறித்து பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி மீது மரியாதை வைத்துள்ளதாகவும் கூட்டணி குறித்து அறிவிக்கும் முன் அகிலேஷ் யாதவ் தங்களிடம் பேசவில்லை எனவும் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close