உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பள்ளி வளாகத்தில் பசுமாடுகள் கட்டி வைக்கப்பட்டதால் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்றது முதல் பசுக்கள் மீது கூடுதல் அக்கறை செலுத்தி வருகிறார். உயர் மட்ட அதிகா ரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், பசுக்களை உரிய முறையில் பாதுகாப்பது குறித்து ஆலோசனைகளை வழங்கினார். வழி தவறிய பசுக்களை பாதுகாக்க கமிட்டி அமைக்குமாறு தலைமைச் செயலாளருக்கும் அறிவுரை வழங்கிய செய்தி சமீபத்தில் வெளியானது.
இந்நிலையில், தெருக்களில் சுற்றித்திரியும் பசுக்களை சிலர் வதைப்பதால் விவசாயிகள் பள்ளி, அரசு மருத்துவமனைகளில் கட்டி வைத்து வரு கின்றனர். அந்த வகையில், பண்டா என்ற பகுதியில் இயங்கி வரும் அரசுப் பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட பசுக்கள் கட்டி வைக்கப்பட்டிருந்தன. இதைக் கண்ட பள்ளி மாணவர்கள் வகுப்பறைக்குச் செல்லாமல் வெளியேறினர். இதற்கிடையே கல்விக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், மாடுகளை கட்டி வைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி நிர்வாகம் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப் பட்டுள் ளது.
“குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்” - 5 மாநில அரசுகள் போர்க்கொடி
50 நாட்களை நிறைவு செய்த ‘பிகில்’, ’கைதி’ - ரசிகர்களுக்கு இயக்குநர் நன்றி
சாய்ந்த 50 ஆண்டுகள் பழமையான மரம் - மீண்டும் அழகாக நட்டு வைத்த அதிகாரிகள்
பாலியல் வன்கொடுமைக்கு 21 நாட்களுக்குள் தூக்கு - ஆந்திர பேரவையில் நிறைவேறியது திஷா மசோதா
அசாம் போராட்டத்தால் ஜப்பான் பிரதமரின் இந்திய வருகை ஒத்திவைப்பு?