[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்திய அணி
  • BREAKING-NEWS வரும் 17-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் 25-ஆம் தேதி வெளியீடு: நவம்பர் 18-ஆம் தேதி வரை திருத்தங்கள் செய்யலாம்
  • BREAKING-NEWS ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு

எந்தக் கூட்டணியாலும் பாஜகவை வீழ்த்த முடியாது: பிரதமர் மோடி

no-one-can-beat-bjp-in-lok-sabha-election-pm-modi

வரும் மக்களவை தேர்தலில் எந்த ஒரு கூட்டணியாலும் பாரதிய ஜனதாவை வீழ்த்த முடியாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் பாரதிய ஜனதா தேசிய கவுன்சில் கூட்டத்தில் நிறைவுரை ஆற்றியபோது பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

ஊழல் இல்லாமல் நாட்டை நிர்வாகம் செய்ய முடியும் என்பதை தங்கள் அரசு நிரூபித்திருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார். சுதந்திரத்திற்குப் பிறகு வல்லபாய் படேல், முதல் பிரதமராக பதவியேற்றிருந்தால் நாட்டின் நிலைமை இன்று வேறு மாதிரி இருந்திருக்கும் என்றும் நரேந்திர மோடி தெரிவித்தார். எந்த ஒரு தரப்பினரையும் பாதிக்காத வகையில் 10% இட ஒதுக்கீடு மசோதா கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் இது அரசமைப்பு சட்ட வரம்பிற்குட்பட்டே இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

முன்னதாக, இக்கூட்டத்தில் பேசிய பாரதிய ஜனதா தலைவர் அமித் ஷா, சட்டத்திற்குட்பட்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என்றும் இக்கோயில் கட்டுவதற்கு காங்கிரஸ் கட்சி தடைக்கற்கள் போட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டினார். 3 மாநில தேர்தல் தோல்வியை கண்டு பாஜக தொண்டர்கள் மனந்தளரக் கூடாது என்றும் மக்களவை தேர்தலில் வெல்வதே முக்கியம் என்றும் அமித் ஷா தெரிவித்தார். நாடெங்கிலுமிருந்து 12 ஆயிரம் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் தேர்தலை எதிர்கொள்வது குறித்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close