[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியா, தென்னாப்ரிக்கா இடையே ராஞ்சியில் இன்று தொடங்குகிறது மூன்றாவது டெஸ்ட் போட்டி
  • BREAKING-NEWS பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

“உத்தரப் பிரதேசத்தில் காங். தனித்து போட்டியிடத் தயார்” - ரா‌ஜீவ் பக்ஷி

ready-to-contest-separately-in-uttar-pradesh-congress

உத்தரப் பிரதேசத்தில் தனியாக போட்டியிடத் தயாராக இருப்பதாக அம்மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரா‌ஜீவ் பக்ஷி தெரிவித்துள்ளார்.

இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. 80 மக்களவை தொகுதிகளை கொண்டுள்ளதால் உத்தரப்பிரதேசம் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இங்கு எதிரெதிர் துருவங்களாக காணப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாதி கட்சியும் பாஜகவை வீழ்த்தும் ஒரே நோக்கில் கூட்டணி வைக்க முயற்சி மேற்கொண்டுள்ளன.

சென்ற ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற 3 தொகுதிகள் இடைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி சேர்ந்தது. அப்போது, ஆளுங்கட்சியான பாஜக மூன்றிலும் தோல்வியடைந்தது. குறிப்பாக முதல்வர் மற்றும் துணை முதல்வர் தொகுதியிலேயே அவர்கள் தோற்றனர். இதனை மையமாக வைத்து தற்போது மீண்டும் இவ்விரு கட்சிகளும் கூட்டணி அமைக்க உள்ளன.

அதன் தொடர்ச்சியாக அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி இருவரும் கூட்டாக நாளை செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளனர். இந்தச் செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவதோடு, தொகுதி உடன்பாடு குறித்து பேசுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. இதனிடையே காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு இடங்கள்தான் கொடுப்போம் எனவும் அவர்கள் கூட்டணியில் இடம் பெறுவார்களா இல்லையா என்பது குறித்து தற்போது ஒன்றும் சொல்வதற்கு இல்லை என அகிலேஷ் யாதவ் தெரிவித்துவிட்டார். கூட்டணியில் இருந்தால் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கேட்கும் என்ற காரணத்தினால் அக்கட்சிக்கு இந்தக் கூட்டணி முக்கியத்துவம் கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் தனியாக போட்டியிட தயாராக இருப்பதாக அம்மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரா‌ஜீவ் பக்ஷி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 45 தொகுதிகள் போட்டியிட வாய்ப்பு ஏற்பட்டால், தேசிய கட்சியை முன்னிலைப்படுத்தி மாநில கட்சிகள் வெற்றி பெறலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர்கள் தனித்துவமாக மக்களுக்கு தெரிய தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதே உத்தரப் பிரதேச கா‌ங்கிரஸ் நிர்வாகிகளின் விருப்பம் என்பதால் தனித்து போட்டியிடத் தயாராக இருப்பதாக காங்கிரஸ் ராஜீவ் பக்ஷி தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close