[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்தல் விதிகளை மீறியதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS இடைத்தேர்தல் தேர்தலில் நாங்குநேரி - 66.10%, விக்கிரவாண்டி - 84.36% வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - ஆட்சியர்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாள் அக்.28ஆம் தேதி (திங்கள் கிழமை) அரசு விடுமுறை

முதலைக்கு கண்ணீருடன் இறுதி மரியாதை செலுத்திய பொதுமக்கள்

130-year-old-crocodile-dies-villagers-mourn

சத்தீஸ்கரில் இறந்து போன முதலைக்கு கிராம மக்கள் கண்ணீருடன் இறுதி மரியாதை செலுத்தியுள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலம் பெமேட்ரா மாவட்டத்தில் உள்ளது பவமோகத்ரா கிராமம். இந்தக் கிராமத்தில் உள்ள குளத்தில் முதலை ஒன்று வசித்து வந்தது. 3 மீட்டர் நீளமுள்ள இந்த முதலை கிட்டத்தட்ட 130 ஆண்டுகளாக அந்தக் குளத்தில் வாழ்ந்து வந்துள்ளது. சிறுவர்கள் குளத்தில் குளிக்கும்போது கூட அந்த முதலை சிறுவர்களை எந்தத் தொந்தரவும் செய்வதில்லை எனக் கிராம மக்கள் கூறுகின்றனர். அதனால் அந்த முதலையை கிராம மக்கள் அனைவரும் நண்பர்கள் போலவே பார்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில் திடீரென அந்த முதலை குளத்தில் இறந்து கிடந்துள்ளது. இதை பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து முதலைக்கு கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் பிரதேச பரிசோதனை நடைபெற்றது. அப்போது முதலை, இயற்கை காரணங்களால்தான் உயிரிழந்தது தெரியவந்தது. இதனையடுத்து முதலையை இறுதி மரியாதையுடன் அடக்கம் செய்ய கிராம மக்கள் முடிவு செய்தனர்.

அதன்படி டிராக்டர் உதவியுடன் இறுதி ஊர்வலமாக முதலை கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 500 பேர் இந்த இறுதிச் சடங்கில் பங்கேற்றனர். அப்போது உணர்ச்சி மிகுதியால் அவர்கள் கண்களில் கண்ணீரால் ததும்பியது. மாலை, மலருடன் முதலமைக்கு இறுதிச் சடங்கு செய்யப்பட்ட சம்பவம், கிராம மக்கள் முதலையின் மீது வைத்திருந்த பாசத்தை வெளிப்படுத்துவதாக இருந்தது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close