[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS ஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS சசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது

“காங்கிரஸ் கட்சிக்கு இரண்டே இடங்கள்தான்” - அகிலேஷ் யாதவ்

we-will-leave-2-seats-for-congress-says-akhilesh-yadav-on-lok-sabha-poll-plan

காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு இடங்கள்தான் கொடுப்போம் என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

சமாஜ்வாடி - பகுஜன் சமாஜ் கட்சிகள் இடையிலான கூட்டணி குறித்த தகவல்கள் கடந்த ஆண்டு முதலே வெளிவந்த வண்ணம் உள்ளது. சென்ற ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற 3 தொகுதிகள் இடைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சியும் பகுஜன் சமாஜ்வாதி கட்சியும் கூட்டணி சேர்ந்தது. அப்போது, ஆளுங்கட்சியான பாஜக மூன்றிலும் தோல்வியடைந்தது. குறிப்பாக முதல்வர் மற்றும் துணை முதல்வர் தொகுதியிலேயே அவர்கள் தோற்றனர்.

இதனால், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் இந்தக் கூட்டணி தொடரும் என்று பேசப்பட்டது. வரும் ஜனவரி 15ம் தேதி மாயாவதி பிறந்தநாளன்று இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. இதற்காக கடந்த சில வாரங்களாகவே இருகட்சிகளிடையே தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. அதேபோல், இந்தக் கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு இடமில்லை என்றும் பேசப்பட்டது. 

இதைத்தொடர்ந்து, அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி இருவரும் கூட்டாக நாளை செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளனர். இந்தச் செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவதோடு, தொகுதி உடன்பாடு குறித்து பேசுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. 

இதனிடையே 2014 மக்களவை தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் அப்னா தாள் கட்சியுடன் கூட்டணி அமைத்து பாஜக 73 இடங்களை கைப்பற்றி அசத்தியது. தனி மெஜாரிட்டியில் யாருடைய உதவியும் இல்லாமல் ஆட்சி அமைக்க உத்தரப்பிரதேசமே பாஜகவுக்கு கை கொடுத்தது.

இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு இடங்கள்தான் கொடுப்போம் எனவும் அவர்கள் கூட்டணியில் இடம் பெறுவார்களா இல்லையா என்பது குறித்து தற்போது ஒன்றும் சொல்வதற்கு இல்லை எனவும் தெரிவித்தார். ஏனென்றால் சமாஜ்வாதி கட்சியும் பகுஜன் சமாஜ்வாதி கட்சியும் கூட்டணி குறித்து முடிவு செய்ய வேண்டியுள்ளது எனக் குறிப்பிட்டார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் அமேதி தொகுதியும், சோனியா காந்தியின் ரேபரேலி தொகுதியும் உத்திரப் பிரதேசத்தில்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close