[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

'என் இதயத்தை திருடிவிட்டாள்.. மீட்டு கொடுங்கள்”- விசித்திரமான புகாரால் போலீஸ் அதிர்ச்சி

she-stole-my-heart-nagpur-man-reports-theft-to-cops

என் இதயத்தை திருடிவிட்டாள். அதனை மீட்டு கொடுங்கள் என நாக்பூரில் இளைஞர் ஒருவர் போலீசாரிடம் புகார் அளிக்கச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீதிமன்றங்கள் பல விசித்திரமான வழக்குகளை சந்திப்பது வழக்கமானது தான். தற்போது காவல்நிலையத்திற்கும் ஒரு விசித்திரமான புகார் சென்றுள்ளது. நாக்பூரை சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது இதயத்தை பெண் ஒருவர் திருடிவிட்டாள் எனவும், திருடப்பட்ட தனது இதயத்தை மீண்டும் மீட்டு கொடுக்க வேண்டும் என போலீசாரிடம் புகார் அளிக்க காவல்நிலையம் சென்றுள்ளார்.

இளைஞரின் புகாரைக் கேட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். எத்தனையோ குற்ற வழக்குகளையும், திருட்டு வழக்குகளையும் கையாண்ட போலீசாருக்கு, இதயத்தை காணவில்லை என்ற புகார் சற்று அதிர்ச்சியாக இருந்தாலும் கூட, இளைஞருக்கு சில அறிவுரைகளும் வழங்கியுள்ளனர். இதுபோன்ற புகாரை பெற சட்டத்தில் இடமில்லை எனத் தெரிகிறது. இதனையடுத்து அந்த இளைஞரிடம் எடுத்துக் கூறிய போலீசார், அவரை காவல்நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பி வைத்தனர்.

கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்த நிகழ்வை நினைவுகூர்ந்து நாக்பூர் போலீஸ் ஆணையர் பேசினார். ஏதாவது பணமோ, பொருட்களோ திருடு போய்விட்டால் கண்டுபிடித்து தர முடியும் எனக் கூறிய அவர், சிலர் கொண்டு வரும் புகார்களை தங்களால் தீர்த்து வைக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close