[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி

நெருங்கும் தேர்தல்! பத்திரிகை விளம்பரங்களின் கட்டணம் உயர்வு

govt-hikes-ad-rates-for-print-media-by-25

தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அச்சு ஊடகங்களில் விளம்பரங்களுக்கான கட்டணத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

இன்னும் சில மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இப்போதே அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. தேர்தலையொட்டி அனைத்து கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு தங்களது சாதனைகளை பட்டியலிட்டு விளரம்படுத்த காட்சி மற்றும் அச்சு ஊடகங்களை பயன்படுத்தும்.

இந்நிலையில் அச்சு ஊடகங்களில் விளம்பரங்களுக்கான கட்டணத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வரும் நிலையில் மூன்று வருட காலத்திற்கு செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போதைய தொகையிலிருந்து 25 சதவீத கட்டண உயர்வு அச்சு ஊடங்களில் விளம்பரங்களை பெற அதிகரிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவால் சிறு பத்திரிகைகள் பயன்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற்ற நிலையில், தேர்தலுக்கு முன்பாக விளரம்பரங்களுக்கான கட்டணத்தை மத்திய அரசு 19 சதவீதம் உயர்த்தியிருந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் அச்சு ஊடங்களில் விளரம்பரங்களுக்கான கட்டணம் 25 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. பல்வேறு காரணிகளை கொண்டு இந்த விலை உயர்வு அமல்படுத்தப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close