[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு
  • BREAKING-NEWS சென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS கர்நாடகா மாநிலத்தின் காங்கிரஸ் எம்எல்ஏக்களை கடத்தியதால்தான் பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு பன்றிக்காய்ச்சல் வந்தது - பி.கே.ஹரிபிரசாத்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.23 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு
  • BREAKING-NEWS வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்

10% இட ஒதுக்கீட்டு மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

10-reservation-passed-in-lok-sabha

பொருளாதார ரீதியில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீட்டை வழங்க வழிவகுக்கும் ‌சட்ட மசோதா நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேறியது.

தற்போதைய நிலையில் பொருளாதார ரீதியில் நலிவுற்றவர்கள் அரசு வேலைவாய்ப்புகளை பெறுவதிலும் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதிலும் பின் தங்கியிருப்பதாக மசோதா‌வில் கூறப்பட்டுள்ளது. எனவே, இத்தரப்பினரின் முன்னேற்றத்திற்கு உதவுவதற்காக சட்டப்பிரிவு 15-ல் திருத்தம் செய்யப்பட வேண்டும் எனவும் மசோதாவில் கூறப்பட்டுள்ளது. இதுபோன்ற திருத்தங்களை மேற்கொள்வதற்கான அனுமதி அரசியல் சட்டத்தில் தரப்பட்டுள்ளதாகவும் மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

பொருளாதார ரீதியாக நலிவுற்றோருக்கான சிறப்பு வசதி என்பது சிறுபான்மையினர் க‌ல்வி நிறுவனங்கள் தவிர ஏனைய அனைத்து கல்வி நிறுவன மாணவர் சேர்க்கைக்கும் பொருந்தும் என தெரி‌விக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போதுள்ள இடஒதுக்கீடு வரம்புக்குள் அல்லாமல் கூடுதலாக 10% இட ஒதுக்கீடு வழங்கப்படும் எனவும் மசோதாவில் தெளிவுபட தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ஒவ்வொரு பிரிவிலும் உள்ள மொத்த இடங்களில் அதிகபட்சம் 10 சதவிகிதத்திற்குள் வரும் வகையில் ஒதுக்கீடு இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பொருளாதாரத்தில் பின் தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவிற்கு அதிமுக சார்பில் தம்பிதுரை எம்.பி. மக்களவையில் கடும் எதிர்ப்பு தெரிவித்து, வெளிநடப்பு செய்தார். பிரதமர் மோடி உறுதியளித்தபடி ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தால் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களே இருக்க மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close