[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு

ஒரு ஆண்டில் 100 பாதுகாப்புப்படை வீரர்கள் தற்கொலை - மத்திய அமைச்சர்

104-military-personnel-committed-suicide-in-2018

15 லட்சத்துக்கும் அதிகமான பாதுகாப்புப்படை வீரர்களை கொண்டுள்ள இந்தியாவில் வருடத்துக்கு 100க்கும் மேற்பட்ட வீரர்கள் தற்கொலை செய்துகொள்வதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாதுகாப்புத்துறை வீரர்களின் தற்கொலைகள் குறித்து மத்திய இணை அமைச்சர் சுபாஷ் ஹம்ரே மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளித்தார். அதில் 2018ம் ஆண்டில் 104 பாதுகாப்புப்படை வீரர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதில் 80 பேர் ராணுவ வீரர்கள், 16 விமானப்படை, 8 கடற்படை வீரர்கள் அடங்குவர். 2017ல் 101 பேரும், 2016ல் 129 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

குடும்பத்தினரை விட்டு தனியே இருக்கும் வீரர்கள் மனதளவில் தனிமையை உணர்கின்றனர். மேலும் குடும்ப பிரச்னைகளை அவர்கள் மனதளவில் துவண்டு விடுவதும், அதற்கு சரியான ஆறுதல் கிடைக்காமல் இருப்பதுமே தற்கொலைக்கு காரணமாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் குறைந்த சம்பளம், விடுமுறை இல்லாமல் பணியாற்றுவது, சரியான வசதிகள் இல்லாமல் தினந்தோறும் வாழ்க்கையை சமாளிப்பது, ஆறுதலற்ற, கவனிப்பில்லாத, மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடிய தலைமையின் கீழ் பணியாற்றுவது உள்ளிட்ட சில காரணங்களும் தற்கொலைக்கு காரணமாக கூறப்படுகிறது.

வீரர்களுக்கு தியானம், யோகா போன்ற பயிற்சிகள் மூலம் அவர்களை மனதளவில் லேசாக உணர வைத்தல், ஆரோக்கியமான மற்றும் வீரர்களின் மனதுக்கு ஏற்ற சூழலை உருவாக்குதல், குடும்பத்துடன் தொடர்பை எளிதாக்குதல், உயர் அதிகாரிகளுடன் நேர்மறையான போக்கை உருவாக்குதல் போன்ற நடவடிக்கைகளால் வீரர்களின் மன உளைச்சலை குறைக்கலாம் என்றும் இதனால் மனதளவிலும் உடலளவிலும் வீரர்களுக்கு பணியாற்றும் சூழல் இணக்கமாகும் என்றும் கூறப்படுகிறது.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close