ஆசிரியர்களுக்கான ஆள்சேர்ப்பு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற இளைஞர், மோசடி செய்தது தெரியவந்ததால் கைது செய்யப்பட்டார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் காலியாக இருந்த 12,640 ஆரம்பப் பள்ளி ஆசியர்களுக்கான இடங்களை நிரப்புவதற்கு கடந்த 2015-ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டு தேர்வும் நடத்தப்பட்டது. இதில் ஆஷிஷ் குமார் என்ற 28 வயது இளைஞர் முதலாவதாக வந்தார். அவருக்கு பணியாணையும் வழங்கப்பட்டது. உமேத்பூர் கிராமத்தில் உள்ள ஆரம்ப பள்ளி ஒன்றில் கடந்த மே மாதம் 3-ஆம் தேதி ஆஷிஷ் குமார் ஆசிரியராக பணியமர்த்தப்பட்டார்.
இதனிடையே போலி மதிப்பெண்கள் சான்றிதழை அளித்து சிலர் பணியில் சேர்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து இதுகுறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டது. இந்த விசாரணையில் ஆஷிஷ் குமார் வாழ்நாளில் கல்லூரிக்கே சென்றவரில்லை என்பது தெரியவந்துள்ளது.
முன்னதாக ஆஷிஷ் குமார் உடற்கல்வியல் கல்லூரியில் இளங்கலை பட்டத்தை 88 சதவீத மதிப்பெண்களோடு முடித்திருந்ததாக சான்றிதழ் வழங்கியிருந்தார். விசாரணையில் அவர் குறிப்பிட்டிருந்த கல்லூரியில், அவர் பயிலவே இல்லை என்பது உறுதியானது. இதனையடுத்து அவர் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தது தெரியவந்தது.
அத்துடன் அடிப்படை கேள்விக்கு கூட ஆஷிஷ் குமார் பதிலளிக்காதது தெரியவந்துள்ளது. அதாவது மனித உடலில் மொத்தம் உள்ள எலும்புகள் 256 என தெவித்துள்ளார். (206 எலும்புகள் என்பதே சரி). அத்துடன் நான்காம் வகுப்பிற்கான கணக்குக் கூட தெரியாமல் அதனை தவறாக போட்டுள்ளார். இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவரை கைது செய்தனர். அடிப்படை கேள்விகளுக்கு கூட பதில் தெரியாமல் தேர்வில் ஆஷிஷ் குமார் முதல் இடம் வந்தது எப்படி ? மோசடியில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு..? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சர்வதேச விளையாட்டு போட்டிகளில் ரஷ்யாவிற்கு 4 ஆண்டுகள் தடை
திருவண்ணாமலையில் இன்று மாலை மகா தீபம்.. பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு..!
குடியுரிமை மசோதா நிறைவேற்றம் முதல் கார்த்திகை தீபம் வரை #TopNews
குடியுரிமை திருத்த மசோதா நகலை மக்களவையில் கிழித்த ஓவைசி
“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா
“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா
‘வர்லாம் வர்லாம் வா...’.. 80 வயதிலும் தளராத மனம்.... யார் இந்த சுல்தான் தாத்தா..!
தாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்ஷன்: மனங்களை வென்ற வீடியோ!
பெண்களுக்கு என்ன கற்றுக்கொடுக்க வேண்டும்?: மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற பெண்ணின் அசத்தல் பதில்!