[X] Close
JUST IN
  • BREAKING-NEWS எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கு தயாராக இருக்க மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு; சொந்த மாவட்டத்திலோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்திலோ பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு
  • BREAKING-NEWS வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்
  • BREAKING-NEWS பத்திரிகையாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீமிற்கு ஆயுள் தண்டனை விதிப்பு - பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS திருச்சி: மணப்பாறை அருகே ஆவாரங்காடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 71பேர் காயம்
  • BREAKING-NEWS சென்னை வண்டலூர் பூங்காவில் காணும் பொங்கலை முன்னிட்டு 3 மணி நிலவரப்படி 40,000பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்
  • BREAKING-NEWS குஜராத்: அகமதாபாத்தில் வல்லபாய் படேல் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் திறப்பு

“உச்சநீதிமன்றம் எந்தத் தடையும் விதிக்கவில்லை”- மேகதாது பற்றி தேவகவுடா

devegowda-exclusive-to-puthiyathalaimurai-on-mekedatu-dam-issue

கர்நாடகாவிலேயே தண்ணீர் இல்லாத போது தமிழகத்திற்கு எப்படி தண்ணீர் கொடுக்க முடியும். பிரச்னையை பகிர்ந்துக் கொள்ளதான் வேண்டும் என முன்னாள் பிரதமர் தேவகவுடா புதிய தலைமுறைக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு மீண்டும் சட்டப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. இதை எப்படி பார்க்கிறீர்கள்?

“நான் சொல்வதை கொஞ்சம் கவனமாக கேளுங்கள். இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் இருக்கிறது. முன்னாள் பிரதமர் என்ற முறையில் நான் எப்படி இந்த விவகாரத்தில் கருத்து சொல்ல முடியும். மேகதாது அணைத் திட்டத்திற்கான வரைவு அறிக்கைக்கு மத்திய அரசு கொடுத்த அனுமதிக்கு உச்சநீதிமன்றம் எந்தத் தடையையும் இதுவரை விதிக்கவில்லை. வழக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. எனவே இந்தச் சூழலில் என்னால் கருத்து கூற முடியாது.” 

கர்நாடக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்ததை தமிழக அரசு நிராகரித்துள்ளது. இதை எப்படி பார்க்கிறீர்கள்..?

“மத்திய அமைச்சர் இருமாநில முதல்வர்களையும் பிரச்னைகளை தீர்க்க பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கிறார். கர்நாடக அரசின் பேச்சுவார்த்தை முயற்சியை தமிழக அரசு மறுத்திருக்கிறது. எனவே உச்சநீதிமன்றம் இதையும் கருத்தில் கொள்ளும் என நினைக்கிறேன்.” 

மேகதாது பிரச்னைக்கான தீர்வாக எதை நீங்கள் முன்வைக்கிறீர்கள்..?

“இதைப் பாருங்கள், தண்ணீரைக் கொடுக்க மாட்டோம் என்பதில் எந்த உண்மையும் இல்லை. 177 டிஎம்சி தண்ணீரை பிலிகுண்டுளுவிற்கு கொடுப்பதில் நாங்கள் தவறவில்லை. இதை உறுதியாக என்னால் சொல்லமுடியும். பயன்படுத்தாத தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. இதைதான் நாங்கள் சேமிக்க போகிறோம். இரண்டாவது, வறட்சி காலத்தில் கடைபிடிக்க வேண்டிய முறைகள் குறித்து  தீர்பாயத்தின் உத்தரவை மேற்கோள் கொண்டு உச்சநீதிமன்ற வழிமுறைகளை கொடுத்துள்ளது. கர்நாடகாவிலேயே தண்ணீர் இல்லாத போது எப்படி தண்ணீர் கொடுக்க முடியும். பிரச்னையை பகிர்ந்து கொள்ளதான் வேண்டும். மேலாண்மை ஆணையம்தான் இதனைக் கருத்தில் கொள்ள வேண்டும்.” என்றார்.

முன்னதாக காவிரி ஆற்றில் புதிதாக மேகதாது அணையை 5 ஆயிரத்து 912 கோடி ரூபாய் செலவில் கட்டுவதற்கு கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. தமிழக எல்லைப் பகுதியில் அமைக்க திட்டமிட்டுள்ள அணை மூலம் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றவும், 400 மெகாவாட் மின்உற்பத்தி நிலையத்தை ஏற்படுத்தவும் கர்நாடகா முடிவெடுத்துள்ளது. ஏற்கெனவே, காவிரியில் உரிய நீரை வழங்க மறுப்பதாக கர்நாடகாவுடன் தமிழகத்துக்கு பிரச்னை உள்ள நிலையில், புதிய அணைக் கட்ட தமிழகம் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close