[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியா, தென்னாப்ரிக்கா இடையே ராஞ்சியில் இன்று தொடங்குகிறது மூன்றாவது டெஸ்ட் போட்டி
  • BREAKING-NEWS பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

“விளைபொருட்களுக்கு அச்சுறுத்தலாக மாறும் மாடுகள்”- பாஜக புகார்..!

cow-become-to-menace-to-farmers-output

விவசாயிகளின் விளைபொருட்களுக்கு மாடுகள் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக மக்களவையில் பேசிய பாஜக எம்.பி.க்கள் தெரிவித்துள்ளனர்.

தாங்கள் விளைவிக்கும் பொருட்களுக்கு போதிய வருமானம் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டை நீண்ட காலமாகவே விவசாயிகள் முன்வைத்து வருகின்றனர். அதேபோல விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என ஒவ்வொரு அரசும் பதவியேற்கும் போது வாக்குறுதியளித்து வருகிறது. இந்நிலையில் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு மாடுகள் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக மக்களவையில் பேசிய பாஜக எம்.பி.க்கள் தெரிவித்தனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் பாண்டா தொகுதி எம்.பியான பைரோன் பிரசாத் மிஸ்ரா தான் இப்பிரச்னையை முதலில் மக்களவையில் எழுப்பினார். அவர் பேசும்போது, “தனித்து விடப்படும் ஒரு சில மாடுகள் விவசாயிகளுக்கு மிகப்பெரிய பிரச்னையாக இருக்கின்றன. விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டு, நீண்ட நாட்கள் உழைத்து பயிர்களை வளர்க்கின்றனர். ஆனால் சில தனித்துவிடப்படும் மாடுகள் அவற்றை மேய்ந்து அழித்துவிடுகின்றன. தற்போது விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது குறித்து பேசிவருகிறோம். உண்மையில் மாடுகள் பிரச்னைக்கு பேசி தீர்வுக் காணாவிட்டால் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது மிகவும் கஷ்டமானது” என்றார்.

ராகி பயிர்களை மாடுகள் மேய்ந்து விடுவதிலிருந்து காக்க தன் தொகுதியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அரசு கட்டடங்களை தற்காலிகமாக பசுமாடுகளின் காப்பகமாக மாற்றவும் அவர் வலியுறுத்தினார்

இதுகுறித்து பேசிய ஹிமாச்சலப் பிரதேச மாநில எம்.பி.யான அனுராக் சிங் தாகூர், இதேபோன்ற பிரச்னை தனது மாநிலத்திலும் இருப்பதாக குறிப்பிட்டார். மாடுகளிடம் இருந்து விளைப்பயிர்களை காக்க எம்.பி.க்களுக்கு வழங்கப்படும் தொகுதி மேம்பாட்டு நிதியில் வேலி அமைக்க அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். இதேபோன்று பிரச்னை தனது மாநிலத்திலும் இருப்பதாக மத்தியப் பிரதேச பாஜக எம்.பியான ஜனார்த்தன மிஸ்ரா கூறினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close