[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் இன்று மாலை 6 மணிக்குள் வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் கெடு விதித்துள்ளார்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

தெலங்கானாவின் முதல் தலைமை நீதிபதியாக ராதாகிருஷ்ணன் பதவியேற்பு

tb-radhakrishnan-takes-oath-as-first-chief-justice-of-telangana-hc

தெலங்கானா மாநிலத்தின் முதல் தலைமை நீதிபதியாக டிபி ராதாகிருஷ்ணன் என்ற தோட்டத்தில் பாஸ்கரன் நாயர் ராதாகிருஷ்ணன் இன்று பதவியேற்றார். 

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம், 2014 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டது. நீண்ட போராட்டங்களுக்கு பிறகு தெலுங்கானா, தனி மாநிலம் ஆனது. மாநிலம் பிரிக்கப்படுவதற்கு முன் ஐதராபாத் தலை நகரமாக இருந்தது. உயர்நீதிமன்றம் உட்பட அனைத்து முக்கிய அரசு அலுவலகங்களும் ஐதராபாத்தில் தான் இருந்தன. பின்னர், ஒவ்வொன்றாக ஆந்திர மாநிலத்தில் தனியாக உருவாக்கப் பட்டன. அமராவதி ஆந்திர தலைநகரானது. மாநிலங்கள் பிரிந்ததை போலவே ஐதரபாத்தில் உள்ள உயர்நீதிமன்றமும் பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இருதரப்பினரும் முன் வைத்தனர்.

இந்நிலையில், குடியரசுத் தலைவர் மாளிகை அதற்கான அறிவிப்பை வெளியிட்டது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு தனித் தனியாக உயர்நீதிமன்றங்கள் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, ஆந்திர உயர்நீதிமன்றத்திற்கு 16 நீதிபதிகளும், தெலுங்கானா உயர்நீதிமன்றத்திற்கு 10 நீதிபதிகளும் இருப்பார்கள் என்று கூறப்பட்டது. 

ஜனவரி ஒன்றாம் தேதி முதல் தெலங்கானா, ஆந்திர மாநில தலைமை நீதிபதிகள் பதவியேற்பார்கள் என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி தெலங்கானா மாநிலத்தின் முதல் தலைமை நீதிபதியாக, தோட்டத்தில் பாஸ்கரன் நாயர் ராதாகிருஷ்ணன் இன்று காலை பதவி ஏற்றார். ஆளு நர் நரசிம்மன் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், மூத்த அரசு அதிகாரி கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். 

இதையடுத்து விஜயவாடா சென்ற ஆளுநர், அங்கு ஆந்திர மாநில தலைமை நீதிபதியான பிரவீன் குமாருக்கு பதவி பிரமாணம் செய்து வைத் தார். இதற்கான விழாவில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உட்பட பலர் கலந்துகொண்டனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close