[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் உடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு
  • BREAKING-NEWS பேரவை தேர்தலில் பாஜக கூட்டணியே ஆட்சியமைக்கும் - பொன்.ராதாகிருஷ்ணன்
  • BREAKING-NEWS டெல்லியில் மைக்ரோசாஃப்ட் இணை-நிறுவனர் பில்கேட்ஸ், பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு
  • BREAKING-NEWS போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் சென்னையை தனித்தொகுதியாக அறிவிக்க வேண்டும் – சீமான்
  • BREAKING-NEWS அதிசயம், அதிர்ஷ்டத்தை நம்புகிறவர் ரஜினி - அமைச்சர் ஜெயக்குமார்

இன்று முதல் அமலுக்கு வந்தது ஜிஎஸ்டி வரி குறைப்பு

gst-will-reduced-in-film-ticket-and-more-on-today-onwards

சினிமா டிக்கெட், டிவி, பவர் பேங்க் போன்ற மக்கள் பயன்படுத்தும் 23 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரி குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

நாடு முழுவதும் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி 2017 ஆம் ஆண்டு ஜூலை முதல் அமலுக்கு வந்தது. ஜிஎஸ்டியை பொறுத்தவரை 5, 12, 18, 28 என நான்கு விகிதங்களில் வரி வசூலிக்கப்படுகிறது. இது குறித்து முன்னர் பேசிய பிரதமர் மோடி ஜிஎஸ்டி வரி விதிப்பில் 99 சதவீதப் பொருட்கள் 18 சதவீதம் அல்லது அதற்கும் குறைவான வரிவிதிப்பிற்கு கொண்டு வரப்படும் எனத் தெரிவித்திருந்தார். நாட்டு மக்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்படும் எனக் கூறியிருந்தார்.

Image result for 31st gst council meeting

இதனைத்தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 31ஆவது கூட்டம், கடந்த மாதம் 22‌ஆம் தேதி தலைநகர் டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு பொருட்கள் மீதான வரி குறைப்பு குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. 

ஆகவே பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளை 18 சதவீதத்திற்கு கீழான வரிப் பிரிவிற்கு மாற்றும் அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்நிலையில் 23 பொருட்களின் ஜிஎஸ்டி வரியைக் குறைக்க கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி சினிமா டிக்கெட், தொலைக்காட்சிப் பெட்டி, பவர்பேங்க், 3ஆம் நபர் காப்பீடு கட்டணம், பதப்படுத்தப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்கள், உள்ளிட்ட 23 பொருட்களின் விலை குறைக்கப்பட்டது. 

அதனையொட்டி புத்தாண்டு பரிசாக சாமானிய மக்கள் பயன்படுத்தும் இந்த 23 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதில் 100 ரூபாய்க்கு மேல் உள்ள சினிமா டிக்கெட்டுக்கான ஜிஎஸ்டி 28 %ல் இருந்து 18%ஆகவும், 100 ரூபாய்க்கு கீழ் உள்ள சினிமா டிக்கெட்டுக்கான ஜிஎஸ்டி 18%ல் இருந்து 12%ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. தமிழகம்  சம்பந்தப்பட்ட 23 பொருட்களில் 28% உள்ள பொருட்கள் 12% ஆகவும் சில பொருட்கள் 5% ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close