[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கில் நாளை காலை தீர்ப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு.
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.18 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.54 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்: குரூர நகைச்சுவை என காங்கிரஸ் கண்டனம்
  • BREAKING-NEWS தென் பெண்ணை ஆற்றில் கர்நாடகா கட்டும் அணைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு: உச்நீதிமன்றம் இன்று தீர்ப்பு
  • BREAKING-NEWS இலங்கை அதிபர் தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் ஓய்கிறது

தண்ணீரை வெளியேற்றுவதில் தாமதம்: தொடர்ந்து 20 ஆவது நாளாக சுரங்கத்தில் தொழிலாளர்கள்

meghalaya-miners-rescue-nears-week-3

மேகாலயா சுரங்கத்தில் புகுந்துள்ள தண்ணீரை வெளியேற்றுவதில் கால தாமதமாவதால் அதில் சிக்கிய தொழிலாளர்களை மீட்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. 

மேகாலயாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஜைன்டியா மாவட்டத்தின் சான் கிராமத்தில் அமைந்துள்ள சுரங்கத்துக்குள், அருகில் உள்ள லைத்தின் ஆற்றில் இருந்து கடந்த 13 ஆம் தேதி தண்ணீர் புகுந்தது. இதையடுத்து சுரங்கத்தில் வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்களில் 15 பேர்  சிக்கினர். 

கடந்த இரு வாரங்களுக்கு மேல் அவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்புப்படையைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர், அப்பகுதியில் முகாமி ட்டு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திடீர் வெள்ளத்தால் சுரங்கத்தினுள் தண்ணீர் புகுந்தது, இதனால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க, ஒடிசா தீயணைப்பு வீரர்களும் கடற்படை வீரர்களும் அங்கு சென்றுள்ளனர். அவர்கள் மீட்பு பணிக்கான வேலைகளை நேற்று தொடங்கினர். 

’’சுரங்கத்தில் புகுந்துள்ள தண்ணீரை வெளியேற்றுவதில் கால தாமதம் ஏற்படுகிறது. இதை முழுவதையும் வெளியேற்ற ஒரு வார கால ஆகும். அதன் பிறகே தொழிலாளர்களை மீட்க முடியும்’’ என்று மீட்புக் குழு தெரிவித்துள்ளது. இதனால் அங்கு சிக்கல் நீடித்து வருவதாக கடற்படை வீரர்கள் தெரிவித்துள்ளனர். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close