[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு
  • BREAKING-NEWS தனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS ஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்

இதுவரை 2 கோடி டன்னுக்கு மேல் அரிசி கொள்முதல் - மத்திய அரசு தகவல்

rice-procurement-about-2-crore-tone-central-govt

நடப்பு சந்தை ஆண்டில் இதுவரை 2 கோடியே 39 லட்சம் டன் அரிசி கொள்முதல் செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஒரு கோடியே 13 லட்சம் டன் அரிசி கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹரியானாவில் இருந்து 39 லட்சம் டன்னும் சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானாவிலிருந்து தலா 22 லட்சம் டன்னும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய உணவுக் கழகம் தெரிவித்துள்ளது.

உத்தரப்பிரதேசத்திலிருந்து 13 லட்சம் டன், ஆந்திராவிலிருந்து 10 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் கொள்முதல் ஏறக்குறைய முடிந்துவிட்ட நிலையில் தமிழகம், மேற்கு வங்கம், பீகார் ஆகிய மாநிலங்களில் இனிமேல்தான் பெருமளவு கொள்முதல் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதத்தில் முடியும் சந்தை ஆண்டில் இந்த முறை 3 கோடியே 75 லட்சம் டன் அரிசியை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:

[X] Close